விஜய்யுடன் யோகி பாபு நடித்தாலே படம் பிளாப் தான் ! இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பதிவு..
மோசமான விமர்சனத்திற்கு யோகி பாபுவின் பதிலடி
தமிழ் திரையுலகில் தற்போதும் மிகவும் பிரபலமான மற்றும் பிஸியான நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு.
எந்த திரைப்படங்கள் வெளியானாலும் யோகி பாபு அதில் இல்லாமல் இருக்கமாட்டார் என்ற அளவிற்கு யோகி பாபு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டர் ஆக்ட்டிவ்வாக இருந்து யோகி பாபு அவ்வப்போது தனது திரைப்படங்கள் குறித்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி அவர் சமீபத்தில் தளபதி 66 படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்திருந்தார்.
அந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் "நீ விஜய் கூட நடித்த மூன்று திரைப்படங்களும் பிளாப் தான், சர்கார் A.R.முருகதாஸ் அவுட், பிகில் அட்லீ அவுட், பீஸ்ட் நெல்சன் அவுட். அடுத்தும் தொடர்கிறது" என பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள யோகி பாபு "Thankyou Pa" என ரிப்ளை செய்துள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) May 3, 2022
விஜய் இதை செய்தால் போதும் - பேட்டியில் மனமுடைந்து கண்கலங்கிய SAC...