முதல்முறையாக வெளியான யோகி பாபுவின் மகன் போட்டோ, வீடியோ! இணையத்தில் படுவைரல்
நடிகர் யோகி பாபு தற்போது கோலிவுட்டில் முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார். அவர் மற்ற ஹீரோ படங்களில் காமெடியாக நடிப்பது மட்டுமின்றி தனியாக படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
யோகி பாபுவுக்கு 2020ல் திருமணம் நடைபெற்று, தற்போது அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மகனுக்கு விசாகன் என அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். பெயர் சூட்டு விழாவுக்கு பிரபலங்கள் பலரும் சென்று இருந்தார்கள்.
இந்நிலையில் இன்று யோகி பாபுவுக்கு பிறந்தநாள் என்பதால் அதை வீட்டில் கொண்டாடி இருக்கிறார். அந்த பார்ட்டியில் நடிகை சஞ்சனா சிங்கலந்துகொண்டிருக்கிறார் .
அப்போது யோகி பாபுவின் மகனுடன் எடுத்த வீடியோவை சஞ்சனா வெளியிட்டு இருக்கிறார். முதல் முறையாக வெளியாகி இருக்கும் யோகி பாபுவின் மகன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#YogiBabu son, with actress Sanjana pic.twitter.com/auplEP3dMy
— Parthiban A (@ParthibanAPN) July 22, 2022


