ராஜு நீங்க ஒன்னும் குழந்தை கிடையாது.. தளபதி டைலாக் பேசி திட்டிய பிக் பாஸ்
பிக் பாஸ் 5ல் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் ராஜு. அவர் டைட்டில் ஜெயிக்க தான் அதிக வாய்ப்பிருக்கிறது எனவும் பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முந்தைய டாஸ்குகளில் விட்டுக்கொடுத்து வந்த ராஜு தற்போது ஓரளவு ஈடுகொடுத்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்றைய டிக்கட் டு ஃபினாலே டாஸ்கில் போட்டியாளர்கள் பெயிண்ட் இருக்கும் முட்டையை கட் அவுட் மீது அடிக்கவேண்டும் என சொல்லப்பட்டது. கேட்கப்படும் கேள்விக்கு தகுந்தாற்போல அவர்கள் யார் போட்டோவையாவது தேர்வு செய்து அடிக்கலாம். 'அன்பை ஆயுதமாக வைத்து விளையாடுவது யார்' என பிக் பாஸ் கேள்வி கேட்டபோது 'அது நான் தான்' என சொல்லி முட்டையை தனது போட்டோவுக்கே அடித்து கொண்டார்.
பிரியங்கா வந்து அமீர் பவானியிடம் அன்பை ஆயுதமாக பயன்படுத்துவது பற்றி சொன்ன பிறகு தான் ராஜுவுக்கு தெளிவு வந்தது. 'நான் கேள்வியை தவறாக புரிந்துகொண்டேன். இப்போது மாற்ற முடியுமா?' என கேட்டார்.
"நீங்க குழந்தை இல்லை ராஜு. கேள்வி தமிழில் தான் கேட்கப்படுகிறது. ஒருமுறை முடிவெடுத்து முட்டை அடித்துவிட்டால் உங்க பேச்சை நீங்களே கேட்க முடியாது" என கூறினார்.
"ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா.. என் பேச்ச நானே கேட்கமாட்டேன்" என தளபதி விஜய் பேசும் வசனத்தை அப்படியே மாற்றி பிக் பாஸ் பேச அனைவரும் சற்று ஆச்சர்யம் ஆனார்கள்.