அச்சு அசல் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் இளம் நடிகை.. புகைப்படத்தை பாருங்க
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் கைவசம் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர், நடிகைகள் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது அச்சு அசல் நடிகை சமந்தாவை போலவே இருக்கும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த இளம் நடிகை வேறு யாருமில்லை, மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தான். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது தனுஷ் நடித்துவரும் 'வாத்தி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அவரின் புகைப்படம்..

