ஷாருக்கானை டேட்டிங் அழைத்த இளம் ரசிகை.. பதிலுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஷாருக்கான். சில தினங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் 'பதான்' திரைப்படம் வெளியானது.
இதில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான் கானும் நடித்திருந்தார்.
பதான் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றில் காவி நிற பிகினியை அணிந்து தீபிகா படுகோன் கவர்ச்சியாக நடனம் ஆடியிருப்பார். இதற்கு பல தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் பதான் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு பிறகும் வெளியாகி வசூலை அள்ளி குவித்து வருகிறது.

டேட்டிங்?
இந்நிலையில் இளம் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம், " நான் உங்களை திருமணம் செய்து கொள்ள கேட்டவில்லை. ஆனால் காதலர் தினம் அன்று நான் உங்களை டேட்டிங் செய்யலாமா?" என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், "நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன். நீங்கள் நல்ல பையனுடன் சேர்ந்து பதான் படத்தை பாருங்கள்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
I am boring as a date….take some cool guy and watch #Pathaan in a theatre https://t.co/yCKPFo1QcS
— Shah Rukh Khan (@iamsrk) February 4, 2023
பைக்கில் வேகமாக பறந்த TTF வாசன்.. பின்னால் இருந்து அலறிய பிரபல சீரியல் நடிகை