14 நாட்களில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?
யூத்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கருணாஸ். இவருடைய மகன் கென் கருணாஸ், தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இதன்பின் வாத்தி, விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

முழுமையான ஹீரோவாக எப்போது இவர் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோவாக மட்டுமின்றி இயக்குநராகவும் யூத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த மாதம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் தேவதர்ஷினி, சுராஜ், மீனாட்சி, நளினி, அனிஷ்மா என பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் பத்திரிகையாளர்களுடன் இணைந்து படக்குழு கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
யூத் திரைப்படம் இதுவரை 14 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 58 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள இப்படம், இனி வரும் நாட்களிலும் தனது வசூல் வேட்டையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
