4 நாட்களில் யூத் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?
கென் கருணாஸ் யூத்
கென் கருணாஸ் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானார். இதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக அவர் நடித்திருந்தாலும், அசுரன்தான் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதன்பின் தனுஷிடம் துணை இயக்குநராகவும், வாத்தி, விடுதலை 2 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், நடிகராக வலம் வந்த கென் கருணாஸ் யூத் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால், யூத் திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் யூத், உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.