யூடியூப்-ல் எதற்கும் துணிந்தவன் படத்தை பின்னுக்கு தள்ளிய அரபிக் குத்து ! சென்சேஷனல் ஹிட்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது, அதன்படி பீஸ்ட் படத்தின் எந்தஒரு அப்டேட் வெளியானாலும் ரசிகர்கள் அதற்கு பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் சொன்னது போல் பான் வேர்ல்ட் அளவில் ஹிட்டாகி இருக்கிறது.
எந்த சமூக வலைத்தளத்திற்கு சென்றாலும் அரபிக் குத்து பாடலின் வீடியோ தான் முன் வந்து நிற்கிறது. அந்தளவிற்கு வைரலாகி இருக்கிறது இப்பாடல்.
இந்நிலையில் யூடியூப்-ல் 5 நாட்களில் 61 மில்லியனுக்கு மேல் பார்வைகளை குவித்துள்ள அரபிக் குத்து பாடல் வெளியானது முதல் ட்ரெண்டிங்கில் No.1 இடத்தில் இருந்து வந்தது.
பின் சமீபத்தில் சூர்யாவின் ET பட வெளியாகி அரபிக் பாடலை பின்னுக்கு தள்ளியது. ஆனால் தற்போது மீண்டும் அரபிக் குத்து ட்ரெண்டிங்கில் No.1 இடத்திற்கு வந்துள்ளது.