சிசுவின் பாலினத்தை வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கிய குக் வித் கோமாளி இர்பான்.. இறுதியில் எடுத்த முடிவு
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான Youtuber-களில் ஒருவர் இர்பான். இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று வருகிறார்.
சர்ச்சையில் சிக்கிய இர்பான்
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு இந்தியாவில் தடை இருப்பதால், இர்பான் தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று சிசுவின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டார்.
அதனை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அந்த வீடியோ வெளிவந்து வைரலான நிலையில், பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இறுதியில் எடுத்த முடிவு
மேலும் Youtuber இர்பான் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இர்பான் விசாரணைக்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரிடம் வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி மூலம் தனது மன்னிப்பை கேட்டுள்ளாராம்.
மன்னிப்பு கேட்டு Youtube-ல் வீடியோ வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இர்பான் மன்னிப்பு கேட்டாலும் கூட குழந்தையின் பாலினம் குறித்து பதிவை வெளியிட்டதற்காக அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்களாம்.