வலிமை படத்திற்கு பின்னணி இசையமைத்தது யுவன் இல்லை.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்
அஜித் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார்.
நேற்று வெளிவந்த இப்படம் தமிழகத்தில் வசூலில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தின் சாதனையையும், வலிமை படம் முறியடித்துள்ளது.
படத்தின் பாடல்களுக்கு யுவன் இசையமைத்திருந்தாலும், பின்னணி இசை யார் அமைந்துள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.
ஏற்கனவே பின்னணி இசையை அமைத்தது ஜிப்ரான் என்று கூறி வந்தாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.
இந்நிலையில், வலிமை படத்தின் பின்னணி இசை அமைத்தது, ஜிப்ரான் தான் என்று யுவன் ஷங்கர் ராஜா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Valimai Festival ?
— Raja yuvan (@thisisysr) February 26, 2022
Book your tickets soon! #AjithKumar @BoneyKapoor #HVinoth #NiravShah @DhilipAction
Nice BGM by @GhibranOfficial
Heartfelt gratitude to #AK fans & my fans for the love & appreciation showered on the Valimai songs, as well as my Original Whistle Theme.