யுவன் - விஜய் கூட்டணி சேர்கிறார்களா? போட்டோவால் எகிறும் எதிர்பார்ப்பு
தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நெல்சன் இயக்கும் இந்த படத்திக்காக விஜய் டப்பிங் கூட பேசி முடிந்துவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படமான தளபதி 66 படத்தினை விரைவில் தொடங்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் வெளிநாடு சுற்றுலா சென்று திரும்பிய பிறகு தான் தளபதி 66 தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் யுவன் விஜய் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அது இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர்கள் கூட்டணி சேர்கிறார்களா, இந்த சந்திப்பு எப்போது நடந்தது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தளபதி 66 படத்தின் தமன் இசையமைக்க உள்ளார். அதனால் இந்த சந்திப்பு அதற்கடுத்த படத்திற்காகவா அல்லது எதேச்சையாக நடந்த சந்திப்பா என குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
— Raja yuvan (@thisisysr) December 24, 2021