யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ இணையத்தில் படுவைரல்
யுவன்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
அவர் இந்து மதத்தில் இருந்து விலகி இஸ்லாமியராக மாறி மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜாப்ரூன் நிஷாவுக்கு தற்போது பிரியா ஒரு மகளும் இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக மதம் மாறிய நிலையில் அதற்கு அடுத்த வருடம் 3ம் திருமணம் செய்து கொண்டார்.

புனித பயணம்
அதற்குப் பிறகு முழுக்க முழுக்க இஸ்லாமியராகவே மதத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டு பல விஷயங்களை யுவன் சங்கர் ராஜா செய்து வருகிறார். பேட்டிகளில் கூட குரான் பற்றி பேசி இருக்கிறார்.
அவர் தன்னுடைய பெயரை அப்துல் காலிக் என மாற்றிக் கொண்ட நிலையில் திரைப்படங்களுக்காக மட்டும் யுவன் என்கிற பெயரை பயன்படுத்தி வருகிறார்.
தற்போது யுவன் சங்கர் ராஜா உம்ரா என்ற் புனித யாத்திரை செல்லும் புகைப்படத்தை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி வருகிறது. இதோ..