சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா.. வெளிவந்த ப்ரோமோ வீடியோ
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இதன் 9வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயாள் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற நேருக்கு நேர் சுற்றில் இருந்து டாப் 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா
இந்த நிலையில், டாப் 5 செலிப்ரேஷன் சுற்று இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த செலிப்ரேஷன் சுற்றுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா விருந்தினராக வருகை தந்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவிற்கு முன் டாப் 5 போட்டியாளர்களுடன் இணைந்து இதற்க்கு முன் சீசன்களில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களும் பாடி அசத்துகிறார்கள்.
அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ..
11வது வருட திருமண நாள், தனது மனைவிக்கு அழகான பதிவு மூலம் வாழ்த்து கூறிய பிரசன்னா- ஹே பொண்டாட்டி