46வது பிறந்தநாளை கொண்டாடும் யுவன் ஷங்கர் ராஜா.. மொத்த சொத்து மதிப்பு விவரம் இதோ
யுவன் பிறந்தநாள்
இசைஞானி இளையராஜாவின் மகனும் முன்னணி இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜாவின் 46வது பிறந்தநாள் இன்று. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு, வீடு, அவர் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம் வாங்க.
சொத்து மதிப்பு
முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன், ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், விஜய்யின் கோட் படத்திற்காக இவர் ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
யுவனுக்கு சென்னையில் சொந்தமாக பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா வீட்டின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறுகின்றனர். அந்த பங்களாவின் கட்டிடத்திற்கு மட்டுமே ரூ. 10 கோடி செலவு செய்துள்ளாராம். அந்த இடத்தின் மதிப்பு இன்னும் பல கோடி இருக்கும் என்கின்றனர்.
சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு ரூ. 125 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
