அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதேன்.. வாழ்க்கை குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா

By Kathick Aug 26, 2024 06:30 AM GMT
Report

யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. ஆரம்பத்தில் இவர் இசையமைத்த படங்கள் தோல்வி அடைந்தாலும் தன் உழைப்பால் இன்று தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்.

[DW5N2F ]

மன்மதன், மங்காத்தா, பையா போன்ற பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது, இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கோட் படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதேன்.. வாழ்க்கை குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா | Yuvan Shankar Raja Speech In School Function

யுவனின் பேச்சு 

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா பள்ளி ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் என் பாடல்கள் தான் என்று பலர் என்னை கேலி செய்தனர். அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன், அழுதேன்.

அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதேன்.. வாழ்க்கை குறித்து பேசிய யுவன் சங்கர் ராஜா | Yuvan Shankar Raja Speech In School Function

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்.. அதுவும் முன்னணி நடிகரின் படத்தில்

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் பிரியங்கா மோகன்.. அதுவும் முன்னணி நடிகரின் படத்தில்

ஆனால் அதன் பிறகு என் முழு உழைப்பையும், கவனத்தையும் இசையில் செலுத்தினேன். இன்று அதனால் தான் உங்கள் முன்பு நிற்கிறேன். உங்களால் முடியாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாமல் நீங்கள் சென்று கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் வெற்றி அடைய முடியும் என்று அந்த விழாவில் யுவன் சங்கர் ராஜா பேசினார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US