விஜய்யின் அரசியல் கட்சிக்காக அதை செய்ய ரெடி! அதிரடி பதிலளித்த யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. பல வெற்றி படங்களுக்கு இசையமைத்தது மட்டுமின்றி, பல ஹிட் பாடல்களை பாடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.
தற்போது, இவருடைய இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் 12 - ம் தேதி கோவையில் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதன் காரணமாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து கோவையில் யுவன் சங்கர் ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா பேட்டி
அந்த பேட்டியில், ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதை தொடர்ந்து, விஜய் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த யுவன், " அவர் சினிமாவில் மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக திகழ்ந்தார். அதுபோல அவர் அரசியலில் ஜொலிப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு 'ஆல் தி பெஸ்ட்'. மேலும், அவர் கட்சிக்கு பாடல் வேண்டும் என்று கேட்டால் கண்டிப்பாக நான் பாடிக்கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில், விஜய் நடித்து வெளிவந்த GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri
