யுவன் பெயருடன் போஸ்டர்! எனக்கு சம்பந்தமே இல்லை என மறுத்த யுவன்.. வெடித்த சர்ச்சை
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தற்போது விஜய்யின் கோட் படத்திற்கு இசைமைத்து வருகிறார். அதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படம் மட்டுமின்றி ஏராளமான சின்ன பட்ஜெட் படங்களையும் யுவன் கைவசம் வைத்து இருக்கிறார். இந்நிலையில் RK சுரேஷ் அடுத்து நடிக்கும் தென் மாவட்டம் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
அதில் யுவன் இசை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மறுத்த யுவன்
ஆனால் இந்த படத்தில் நான் கமிட் ஆகவில்லை, யாரும் அணுகவும் இல்லை என கூறி யுவன் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அதற்கு பதில் கொடுத்த RK சுரேஷ் 'எங்களுடன் ஒரு படம் பற்றும் live in concert ஆகியவற்றிற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கீங்க பாருங்க' என ட்வீட் செய்திருக்கிறார்.
RK சுரேஷ் ஆருத்ரா கோல்டு பண மோசடி வழக்கில் சிக்கி சில காலம் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பி காடுவெட்டி என்ற படத்தின் ரிலீஸுக்கு தயார் செய்து வருகிறார். இந்நிலையில் இப்படி ஒரு சர்ச்சையை அவர் கிளப்பி இருக்கிறார்.
A clarification for Press, Media and Fans!
— Raja yuvan (@thisisysr) March 4, 2024
I have not been committed or approached by anyone for being the music director of the above film, "Then Mavattam". pic.twitter.com/oyDYMxGn1U