திடீரென முடிவுக்கு வரும் ஜீ தமிழின் மிகவும் ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக்
சீரியல்கள்
ஜீ தமிழ் தமிழ் சினிமா மக்களின் பேராதரவை பெற்று வரும் தொலைக்காட்சி.
இதில் சீரியல்களை தாண்டி மக்களை அதிகம் கவரும் வண்ணம் பாடல், ஆடல் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகின்றன.
அண்மையில் தொலைக்காட்சியின் ஜீ தமிழின் கோல்டன் விருதுகள் நிகழ்ச்சி படு பிரம்மாண்டமாக வெள்ளித்திரை பிரபலங்களும் வருகை தர சூப்பராக நடந்தது.
விருது விழா நிகழ்ச்சியின் முதல் பாகம் நாளை மே 1 தின ஸ்பெஷலாக ஒளிபரப்பாக இருக்கிறது.
முடியும் தொடர்
இதில் கார்த்திகை தீபம், அண்ணா, சண்டக்கோழி, சீதா ராமன் என நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு முக்கிய சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.
அதாவது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீதா ராமன் தொடர் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டதாம். இந்த தகவல் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.