ஜீ தமிழ் தொலைக்காட்சியின் அக்டோபர் மாத கொண்டாட்டம் - மெகா திருமண வைபவம்

zee tamil
By Jeeva Oct 02, 2021 05:30 PM GMT
Report

இந்த அக்டோபர் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறும் நிகழவுள்ள 'மெகா திருமண வைபவத்திற்கு' ரசிகர்களை வரவேற்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

 கல்யாண சீஸன் களைகட்டும் இந்த தருணத்தில், அக்டோபர் மாதம் முழுவதும் 'மெகா திருமண வைபவம்' மூலம் முக்கிய திருமண நிகழ்வுகளை நேயர்களுடன் பகிர ஜீ தமிழ் தயாராகியுள்ளது. இனி ஒவ்வொரு ஞாயிறும் ஜீ தமிழில், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நினைத்தாலே இனிக்கும், கோகுலத்தில் சீதை, புதுப்புது அர்த்தங்கள், மற்றும் நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட தொடர்களின் முன்னணி ஜோடிகளின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருமணக் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நிகழவுள்ளன. மேலும், பிளாக்பஸ்டர் மற்றும் நேரடித் தொலைக்காட்சி வெளியீடு திரைப்படங்கள் என இந்த மாதம் கோலாகலமாகத் துவங்கவுள்ளது.

அக்டோபர் 2, சனிக்கிழமை, இரவு 9 மணிக்கு இந்தியாவில் மிகப்பெரிய துப்பறியும் நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'வைல்டு டாக்' ஒளிபரப்பப்படும். அறிமுக இயக்குனர் ஆஷிஷூர் சாலமோன் இயக்கத்தில் உருவாகி பலரின் பாராட்டுகளைப் பெற்ற இத்திரைப்படத்தில், நாகர்ஜுனா அக்கினேனி, தியா மிர்ஸா மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டது.

திருமண கொண்டாட்டங்களை துவங்கும் விதமாக அக்டோபர் 3-ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, நினைத்தாலே இனிக்கும் தொடரின் 2.5 மணிநேர கல்யாண ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எதிரும் புதிருமான ஜோடியான சித்தார்த் மற்றும் பொம்மி இடையே உருவாகும் எதிர்பாராத பிரச்சினைகள் அவர்களை நெருக்கமாக்குவதை இந்த பகுதியில் காணலாம்.

இது மட்டுமல்ல! தொலைக்காட்சிகளில் நேரடி வெளியீடாக வெற்றி துரைசாமியின் 'என்றாவது ஒருநாள்' திரைப்படம் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. விதார்த், ரம்யா நம்பீசன், இளவரசு மற்றும் மாஸ்டர் ராகவன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் கதை - தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை முக்கியமாகக் கருதும் ஒரு விவசாயக் குடும்பத்தினை சுற்றி நகர்கிறது. அக்குடும்பத்தின் அங்கமாக அவர்கள் கருதும் கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படுகையில், அவற்றை காக்க அவர்கள் எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்கிற உணர்வு போராட்டங்களை இப்படம் கண்முன் காட்சிப்படுத்தியுள்ளது.

உங்களது விருப்பமான நிகழ்ச்சிகள் பற்றி எந்நேரத்திலும் தெரிந்துகொள்ள, ஜீ தமிழை இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பின்தொடருங்கள்.

  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US