ஜீ தமிழில் தொடங்கும் புது சீரியல்.. சிபு சூர்யனுக்கு இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?
சின்னத்திரை தொடர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. டிவி ரசிகர்களை கவர்வதற்காகவே சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
தற்போது சன் டிவி தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அடுத்த இடத்தில் விஜய் டிவி இருக்க, ஜீ தமிழுக்கு மூன்றாம் இடம் தான்.

நேரம் மாற்றம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சில சீரியல்களின் நேரம் அடுத்த வாரம் முதல் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வரும் பிப்ரவரி 26ம் தேதி முதல் நள தமயந்தி இரவு 10.30க்கு தான் வர இருக்கிறது. அதே போல மாரி தொடர் மாலை 6.30 - 7 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.
புது சீரியல் வீரா 26ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஹீரோவாக சிபு சூர்யன் மற்றும் ஹீரோயினாக வைஷு நடித்து இருக்கின்றனர்.
ரோஜா சீரியல் மூலம் சிபு சூர்யன் பாப்புலர் ஆன நிலையில், அடுத்து விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்தார். அந்த தொடர் பிளாப் ஆனதால் சில மாதங்களிலேயே முடித்துவிட்டனர். அதன் பிறகு சிபு தற்போது ஜீ தமிழுக்கு சென்று இருக்கிறார். இந்த முறையாவது அவருக்கு ஹிட் கிடைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
எங்க அண்ணே...!!!❤️
— Zee Tamil (@ZeeTamil) February 20, 2024
வீரா | பிப்ரவரி 26 முதல், திங்கள் முதல் வெள்ளி | இரவு 8.00 மணிக்கு.#Veera #NewSerial #Vaishnavi #ZeeTamil pic.twitter.com/9tBsDrbcDx
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri