ஜீ தமிழின் புது சீரியல்.. பூஜையுடன் தொடங்கிய "நெஞ்சத்தை கிள்ளாதே"
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே போல் சேனலும் தொடர்ந்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது.
இந்த சேனலில் அடுத்ததாக நெஞ்சத்தை கிள்ளாதே என்ற சீரியல் வெகுவிரைவில் ஒளிபரப்பாக உள்ளது. ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மா முரளிதரன் நடிக்க உள்ளார். இந்த புதிய சீரியல் குறித்து இதுவரை 2 பிரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
45 வயதான நாயகன், 35 வயதான நாயகி என இருவரும் குடும்பத்திற்காக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வரும் நிலையில் திடீரென இவர்கள் விருப்பமின்றி திருமண பந்தத்தில் இணைய வேண்டிய சூழல் உருவாகிறது. இப்படியான நிலையில் இவர்களின் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில திங்களுக்கு முன்னர் இந்த சீரியலின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.