ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நேயர்களுக்கு டிரிபில் போனஸ் விருந்து
சென்னை: தமது நேயர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கினை தொடர்ந்து வழங்கவேண்டும் என்கிற தீர்மானத்துடன், ஜீ தமிழ் தொலைக்காட்சி மூன்று அற்புதமான நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 26, ஞாயிறு அன்று மாலை 6:30 மணிக்கு குழந்தைகளின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் இத்தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸின் சீஸன் 4 துவங்கவுள்ளது.
தமிழகத்தின் இளம் மற்றும் வளர்ந்து வரும் திறன் மிக்கவர்களுக்கு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மாபெரும் தளத்தை ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீஸன் 4 வழங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாறுபட்ட ஆனால் நம் வாழ்க்கையோடு தொடர்புடைய இரண்டு குடும்பத்தொடர்கள் டிசம்பர் 27, திங்கள்கிழமை முறையே இரவு 9:30 & 10:00 மணிக்கு துவங்கப்படவுள்ளன.
சர்வைவர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தனது பிரைம் டைம் இடத்தை சரியான நிகழ்ச்சிகளைக் கொண்டு நிரப்பவுள்ளது. ரஜினி, மற்றும் வித்யா நம்பர் 1 ஆகிய இரண்டு அற்புதமான கதைகளும் தைரியம் மிக்க பெண் கதாநாயகிகள் எப்படி தங்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கடந்து வெல்கிறார்கள் என்பதைக் காட்டவுள்ளது; ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் மேலும் ஒரு கோலாகலமான சீஸனை வழங்கவுள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சி, மூன்று மணி நேரப் பிரம்மாண்ட சிறப்பு துவக்க நிகழ்ச்சியை வருகின்ற டிசம்பர் 26, ஞாயிறு அன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பவுள்ளது.
அதன் பின்னர், ஒவ்வொரு வாரயிறுதி நாட்களிலும் (சனி மற்றும் ஞாயிறு) ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியாக மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும். மக்களின் பாராட்டுகளை பெற்ற இந்த பிரபல திறன் அறியும் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனில், 5 – 13 வயது வரம்பில் உள்ள 30 குழந்தைகள், பல்வேறு சுற்றுகளில் பலவிதமான கலைநடைகளில் தங்களது நடிப்புத் திறமைகளை நிரூபித்து, மாபெரும் இறுதிச்சுற்றினை நோக்கிச் செல்வார்கள்.
பிரபலங்கள் விஜே கல்யாணி மற்றும் அமுதவாணன் ஆகியோர் இந்த சீஸனின் வழிகாட்டி நிபுணர்களாகச் செயல்பட்டு, குழந்தைகளின் நடிப்புத் திறனை அனைத்து விதங்களிலும் வளர்க்க உதவி, நடுவர்களின் மனதைக் கவர வழிநடத்துவார்கள். திரைத்துறையின் பிரபல நட்சத்திரங்களான சினேகா, மிர்ச்சி செந்தில் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு குழந்தைகளின் நடிப்பு குறித்த தங்களது பாகுபாடற்ற கருத்துக்களை வழங்குவார்கள். இந்த சீஸனின் அனைத்து பகுதிகளையும் முடிவற்ற கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்க கீகீ விஜய் தொகுப்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார்.
டிசம்பர் 27, திங்கள் முதல் ஜீ தமிழில் ‘ரஜினி’ என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. தன் ஆசைகளைக் காட்டிலும் தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் மிக்க ஒரு பெண்ணின் கதையே இத்தொடர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் எப்படி திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம் என்கிற சமூகத்தின் கேள்விகள், மற்றும் விமர்சனங்கள் பற்றிப் பேசும் இக்கதை; திருமணம் என்பதே இந்த சமுதாயத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கையை ஒரு பெண்ணுக்கு வழங்கும் என்கிற பிற்போக்கான எண்ணத்தைப் பற்றியும் அலசவுள்ளது.
இருப்பினும், மாறுபட்ட பெண்ணான ரஜினி இதுபோன்ற நம்பிக்கைகளை எதிர்த்து நின்றும், சமுதாயத்தின் அடக்குமுறைகளை உடைத்தும், தன் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி வாழ்கிறாள். முடிவில் ரஜினியின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதே சுவாரஸ்யமான கதையாகும்! நடிகை ஸ்ரேயா அஞ்சன் தைரியமும், அழகும் நிறைந்த ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யாழினி (ரஜினியின் உயிர்த்தோழி) கதாபாத்திரத்திலும், அருண் (அனிதாவின் தம்பி) பார்த்திபன் கதாபாத்திரத்திலும், நடிகை ஸ்ரீலேகா தாயாகவும், சுபிக்ஷா, ப்ரீத்தா சுரேஷ், தங்கைகளாகவும் மற்றும் நடிகர் ஹேமந்த் நடிக்கின்றனர்.
சிந்திக்க வைக்கும் இந்த தொடர் டிசம்பர் 27 தேதி துவங்கி, திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். அடுத்த புதிய வரவான ‘வித்யா நம்பர் 1’ தொடரும் டிசம்பர் 27 முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இரக்க குணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணான வித்யாவின் வாழ்க்கையைச் சுற்றியே கதை நகர்கிறது. தைரியமான இந்த இளம் பெண், தான் படிக்கவில்லை என்கிற தடையைத் தாண்டி, தன்னுடைய இயற்கையான திறன்களையும், திறமையையும் வெற்றிகரமாக வளர்த்துக்கொள்கிறாள். இருப்பினும், வேதவல்லியின் மகன் சஞ்சயுடன் திருமணமான பிறகு அவளது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
நன்கு படித்து, பல கல்வி நிறுவனங்களை நடத்திவரும் வேதவல்லிக்கு வாழ்க்கையில் அனைத்திலும் முதல் இடத்தில் வரவேண்டும் என்பதே லட்சியம். மனதை தொடும் இந்த கதையில், வாழ்க்கையில் அனைத்திலும் முதல் இடத்தில் வருவதைவிட அன்புடனும், மகிழ்ச்சியுடனும் எப்படி வாழவேண்டும் என்று மருமகளான வித்யா தனது மாமியார் வேதவல்லிக்குப் புரிய வைக்கும் சுவாரஸ்யமான கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது உறுதி. நடிகை நிஹாரிகா மற்றும் இளம் நட்சத்திரம் தேஜஸ்வினி ஆகியோர் மாமியார் மற்றும் மருமகள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் யூடியூப் பிரபலம் இனியன், வேதவல்லிக்கு விசுவாசமான மற்றும் மரியாதையான மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த புதிய நிகழ்ச்சிகள் பற்றிப் பேசிய, ஜீல் (ZEEL) நிறுவனத்தின், ஈ.வி.பி. மற்றும் சவுத் க்லஸ்டர் ஹெட் / தென் பிரிவின் தலைவர், திரு.சிஜூ பிரபாகரன் அவர்கள், “இது நாள் வரை, ஜீ தமிழில் நாங்கள் எங்கள் நேயர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே வழங்காமல், வாழ்வில் தைரியமாகப் பெரிய முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கும் நல்ல கதைகளையும் அவர்களுக்கு வழங்கிவருகின்றோம். எங்கள் சேனலின் உண்மையான ரசிகர்களுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சியை வழங்கும் மேலும் ஒரு முயற்சியாக, எங்களது பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸின் புதிய சீஸனையும், மேலும் இரண்டு ஊக்கமளிக்கும் புதிய தொடர்களான – ரஜினி மற்றும் வித்யா நம்பர் 1 ஆகியவற்றையும் வழங்கவுள்ளோம்.
குறிப்பாக ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்காக இதுவரை எங்களுக்கு அளவற்ற அன்பையும், பாராட்டுகளையும் எங்களது நேயர்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. வளர்ந்துவரும் குழந்தைகளுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தினை அமைத்துத் தந்து, எங்களது நேயர்களையும் மகிழ்விக்கும் நோக்கில், இந்த ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸனை நாங்கள் துவங்கியுள்ளோம். இதற்கும் நேயர்களின் ஆதரவு கிடைக்குமென நாங்கள் நம்புகிறோம். இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி மட்டுமில்லாமல், சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றத்தினை வழங்கும், ரஜினி மற்றும் வித்யா நம்பர் 1 ஆகிய தொடர்களையும் ஒளிபரப்பவுள்ளோம்.
இத்தொடர்களும் உறுதியான மனம் கொண்ட இரண்டு பெண்கள், சமுதாயத்தின் பழைய வீண் பழக்கங்களையும், எண்ணங்களையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காட்டும். ஜீ தமிழ் சேனலில், தினமும் பிரைம் டைம் இடத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகளை நாங்கள் வழங்கவுள்ளோம். மேலும், எங்களது நேயர்களும் இவற்றை ரசிப்பார்கள் என்றும், இதுபோன்ற புதுமையும் வளர்ச்சியை நோக்கிய தயாரிப்புகளையும் ஆண்டுதோறும் வழங்க எங்களை ஊக்குவிப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்”, என்று தெரிவித்தார்.