ரோட்டு கடை பாணிபூரி கேக்குதா? அர்ஜுனுக்கு நூதன தண்டனை கொடுத்த அரசி... சாமந்தியில் பரபரப்பு!
Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் 'சாமந்தி', தினமும் இரவு 8 மணிக்கு ரசிகர்களை தனது விறுவிறுப்பான கதைக்களத்தால் கட்டிப்போட்டு வருகிறது.
முந்தைய எபிசோடில், அர்ஜுனை துணிக்கடைக்கு அழைத்துச் சென்ற சாமந்தி, குறைந்த விலையில் தரமான துணிகளை பேரம் பேசி வாங்கிக் கொடுத்து அவனை ஆச்சரியப்படுத்தினாள். அதன்பிறகு பசி எடுக்கிறது என்று அர்ஜுன் கூறிய போது, பெரிய ஹோட்டலுக்கு செல்லலாம் என்ற அவனது யோசனையை நிராகரித்த சாமந்தி, "ரோட்டு கடை சுவைக்கு ஈடு எதுவும் இல்லை!" என்று கூறி அவனை பாணிபூரி கடைக்கு அழைத்துச் செல்கிறாள்.

இருவரும் மகிழ்ச்சியாக பாணிபூரி சாப்பிட்டு, சிரித்துப் பேசி நேரத்தை கழித்து கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக அந்த வழியாக அரசி தனது தோழியுடன் வருகிறாள். தனது மகளுக்கு ஆதவ்வை மணமகனாக கேட்கும் தோழியிடம், "அது வேண்டாம் என்றால் என் மகன் அர்ஜுன் இருக்கானே!" என்று பெருமையாக பேசுகிறாள்.
ஆனால் அடுத்த நொடியே அவர்களின் கண்களில் விழுவது பாணிபூரி கடையில் சாமந்தியுடன் நெருக்கமாக இருக்கின்ற அர்ஜுன். இதைப் பார்த்த தோழி அதிரடியாக, "உன் மகனுக்கு பாணிபூரி விற்கும் பெண்ணுதான் சரியான ஜோடி. என் மகளுக்கு இவன் வேண்டாம்!" என்று முகத்துக்கு நேராக சொல்லிவிடுகிறாள்.

இந்த வார்த்தைகள் அரசியின் மனதில் நெருப்பாக விழ, அவமானத்திலும் கோபத்திலும் கொதித்தெழுகிறாள். வீட்டிற்கு திரும்பியதும் அர்ஜுனுக்காக காத்திருந்த அரசி, அவன் வந்தவுடன் ஒரு கூடை நிறைய பாணிபூரி வாங்கி வைத்து, "ரோட்டு கடை சாப்பாடு பிடிக்குமா? இதை முழுசாக சாப்பிடு!" என்று அதிரடி தண்டனை வழங்குகிறாள்.
வேறு வழியின்றி பாணிபூரியை சாப்பிடும் அர்ஜுன், ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் வெளியே சென்று வாந்தி எடுக்கிறான். அப்போது அங்கு வரும் சாமந்தி, "டிரைவர் தம்பி, என்னாச்சு?" என்று கவலையுடன் விசாரிக்கிறாள்.
உண்மையை அறிந்த சாமந்தி நேராக அரசியிடம் சென்று கேட்க முயற்சிக்க, அர்ஜுன் அவளை தடுத்து நிறுத்துகிறான். "அம்மா உன்னை இன்னும் பார்க்கல. நீயே போய் மாட்டிக்காதே!" என்று எச்சரிக்கிறான்.

இதனால் சாமந்தி என்ன முடிவு எடுப்பாள்? அரசியின் கோபம் இன்னும் எந்த அளவுக்கு செல்லும்? சாமந்திக்கும் அர்ஜுனுக்கும் இடையிலான நெருக்கம் அடுத்ததாக என்ன பிரச்சனையை உருவாக்கப் போகிறது?
பரபரப்பும் உணர்ச்சிகளும் கலந்த அடுத்தடுத்த திருப்பங்களை அறிய, 'சாமந்தி' சீரியலை Zee தமிழில் காண தவறாதீர்கள்!
ரூ 87 கோடி இழப்பீடு கோரி பிரித்தானியா உள்விவகார அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்த இலங்கையர் News Lankasri
இது தொடக்கம் மட்டுமே... மின்னஞ்சலில் மிரட்டல்: ஐரோப்பா முழுவதும் விமானங்களை முடக்கிய குழு News Lankasri
நூலகத் துறையிலும் Party Fund, தவெக அரசு மிகக் கடுமையாகத் தண்டிக்கும் - அமைச்சர் அருண்ராஜ் IBC Tamilnadu