8 திருப்பங்கள்… அடுத்தடுத்து காத்திருக்கும் ட்விஸ்ட்டுகள்… வித்யா நம்பர் 1 சீரியலின் அதிரடி அப்டேட்!
8 திருப்பங்களுடன் வித்யா நம்பர் 1 சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 2 திருப்பங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க. மூன்றாவது திருப்பமாக டுடோரியலில் படிக்க செல்லும் வித்யாவுக்கு ஆசிரியரால் ஆபத்து வர சஞ்சய் எடுக்கும் முடிவு கதையில் விறுவிறுப்பை கூட்ட உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் வித்யா நம்பர் 1. வித்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தற்போது வித்யாவின் காதலை புரிந்து கொண்டு அவளை ஏற்றுக்கொள்கிறான்.
இதனையடுத்து அம்மாவுக்கு பிடித்த பெண்ணாக வித்யாவை மாற்ற முடிவு செய்து அவளை படிக்க அனுப்ப அங்கு ஆசிரியர் உனக்கு கையெழுத்து சரியாக வரவில்லை என சொல்லி எழுத கற்று கொடுப்பது போல தவறாக நடக்க முயல் சஞ்சய் இந்த விஷயம் அறிந்து ஆசிரியரை அடித்து துவம்சம் செய்கிறான்.
இதனால் வித்யாவும் சஞ்சயும் சந்திக்க போகும் பிரச்சனைகள் என்ன? வித்யாவின் படிப்பு என்னவாகும் என்ற கோணத்திலும் அடுத்தடுத்த எபிசோடுகள் பரபரக்க உள்ளன. இதற்கிடையே சஞ்சயின் தங்கை மானஸாவுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கும் நிலையில் பியூட்டி பார்லருக்கு வித்யா சென்றிருக்கும்போது அங்கு மானஸாவுக்கு பார்த்த மாப்பிள்ளை வேறொரு பெண்ணுடன் வந்திருக்கிறான்.
இந்த விஷயம் வித்யாவுக்கும் சஞ்சய்க்கும் எப்படி தெரிய வருகிறது? மானஸாவின் நிச்சயம் தடுத்து நிறுத்தப்படுமா? இதனால் சகுந்தலா எடுக்க போகும் முடிவு என்ன? என்ற கோணத்தில் வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளன. இந்த இரண்டு திருப்பங்களை தொடர்ந்து அடுத்தடுத்த எபிசோடுகளில் மற்ற திருப்பங்கள் என்னென்ன என்பது தெரிய வரும். இப்படி 8 விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் 1 சீரியலை திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.