இப்படியொரு கேள்வியை கேட்டுட்டியே மா?.. இயக்குனர் ஹரியை பதற வைத்த சத்யா சீரியல் ஆயிஷா
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஹரி. பரபரப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதையுடன் படத்தை இயக்க ஹரியை அடித்து கொள்ள ஆளே இல்லை என சொல்லலாம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஜூலை 1-ம் தேதி யானை திரைப்படம் வெளியாக உள்ளது.
அருண் விஜய், ப்ரியா பவானி ஷங்கர், இமான் அண்ணாச்சி என பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கோலிவுட் மேன்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஹரி இயக்கத்தில் வெளியான படங்களின் நாயகன் கெட்டப்புகளில் லிட்டில் சூப்பர் ஸ்டார் குழந்தைகள் பங்கேற்று பர்பாமென்ஸ் செய்து பட்டய கிளப்பியுள்ளனர். அது மட்டுமல்லாமல் சத்யா சீரியல் நாயகி ஆயிஷா போலீஸ் கெட்டப்பில் வந்து இயக்குனர் ஹரியிடம் நிறைய ஹீரோவை வச்சு மாஸான படம் எடுத்துட்டீங்க. எப்ப சார் என்ன மாதிரி ஹீரோயின் வச்சு படம் எடுக்க போறீங்க என கேட்டுள்ளார்.
இந்த கேள்வியால் பதறிய ஹரி என்னம்மா இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்ட என பதில் அளித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu