விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கொண்டாட்டம்..
தமிழ் மக்கள் தங்களது குடும்பங்களுடன் கொண்டாடும் நிகழ்வுகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.
இந்த இனிய நாளில் குடும்பங்கள் ஒன்றிணைவதால், ஜீ தமிழ் செப்டம்பர் 10ஆம் நாள் முழுவதும் குடும்ப பொழுதுபோக்கு உள்ளடக்கத்தின் ஒரு சிறப்பு வரிசையை உருவாக்கியுள்ளது.
அந்த வரிசையில், காலை 8.30 மணிக்கு, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தலைவி படத்தின், பிரபலங்களுடன் சிறப்பு பேட்டி.
வரிசையில் அடுத்ததாக, காலை 9 மணிக்கு, சிபிராஜ் நடிப்பில் வெளியான, த்ரில்லர் திரைப்படமான 'கபடதாரி'.
'தமிழா தமிழா' மற்றும் 'ஹீரோ யார்' போன்ற நிகழ்ச்சிகளுடன், திரைப்படங்கள் முதல் பேச்சு நிகழ்ச்சிகள் வரை, ஜீ தமிழ் தனது பார்வையாளர்களை மதியம் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணிக்கு ஈர்க்கும்.
வரிசையில் கடைசியாக விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள, நகைச்சுவை படமான கன்னி ராசி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு, செப்டம்பர் 10ஆம் தேதி இந்த விநாயகர் சதுர்த்தியை, ஜீ தமிழுடன் கண்டு மகிழுங்கள்.