ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ்.
இதில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம், பாரிஜாதம், வீரா, அயலி என வித்தியாசமான கதைக்கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல்களை தாண்டி சரிகமப லிட்டில் சாம்ஸ், சிங்கிள் பசங்க போன்ற ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் வரவேற்பால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சன்-விஜய் டிவி நிகழ்ச்சிகளின் டிஆர்பி பக்கம் நெருங்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு டாப்பில் சீரியல்கள் வருகிறது.

மகா சங்கமம்
தற்போது சன் டிவியில் மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே சீரியல்களின் மெகா சங்கமம் நடந்து வருகிறது. அதற்கு ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இப்போது வேறொரு தகவல் என்னவென்றால் ஜீ தமிழில் 2 சீரியல்களின் மகா சங்கமம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
எந்தெந்த தொடர்கள் என்றால், பாரிஜாதம் மற்றும் அயலி சீரியல்களின் மகா சங்கமம் வரும் திங்கள் முதல் இரவு 8 முதல் 9 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.