ஜீ தமிழில் புதியதாக ஒளிபரப்பாக தொடங்கிய புதிய சீரியல்... என்ன தொடர், புரொமோவுடன் இதோ?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சிகள் என்றால் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் தான்.
காலை முதல் இரவு வரை இந்த டிவிகளில் ஒளிபரப்பாகும் எல்லா தொடர்களும் மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழ் டிஆர்பியில் முன்னேற்றத்தை கொண்டு வர நிறைய விஷயங்கள் செய்கிறார்கள்.
சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் ரியாலிட்டி ஷோக்களிலும் மாஸ் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பான சரிகமப ரியாலிட்டி ஷோ முடிவுக்கும் வந்தது.
பைனல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்குமே நல்ல நல்ல பரிசுகளும் கிடைத்துள்ளன.

புதிய தொடர்
ஜீ தமிழில் சமீபத்தில் மனசெல்லாம் என்ற சீரியல் 250 எபிசோடுகளுக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த நிலையில் முடிவுக்கும் வந்தது. தற்போது அந்த தொடரின் இடத்தை நிரப்ப புதிய சீரியலை களமிறக்கியுள்ளனர்.

அவள் வருவாளா என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தொடர் தெலுங்கு சீரியலின் டப்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் ஒளிபரப்பாகும் சீரியலின் புரொமோ இதோ,