கையும் களவுமாக மாட்டிய காளியப்பன்.. அயலி போட்ட ஆர்டர் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அயலி சீரியல்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் காளியப்பனுக்கு ஒரு பார்சல் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது காளியப்பன் ஒரு விஷ மருந்தை வாங்கி அதை கொசு மருந்தில் கலந்து அதன் மூலமாக இந்திராணியை கொல்வற்காக திட்டமிடுகிறான்.
தனது திட்டத்தின் படி கொசு மருந்துடன் இந்த விஷயத்தை கலக்கும் காளியப்பன் அதை இந்திராணி ரூமில் பிளக்-இன் செய்கிறான். இதை பார்த்த அயலி மற்றும் சிவா என இருவரும் காளியப்பன் மீது சந்தேகம் அடைந்து இங்கு என்ன பண்ற என்று கேட்கின்றனர்.

மேலும் காளியப்பன் திட்டத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்து அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட காளியப்பன் போய் உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க. ஆனா நான் சொல்றது தான் நம்புவாங்க நீங்க சொல்றதையா நம்புவாங்க என நக்கல் செய்கிறான்.
காளியப்பன் இந்த குடும்பத்திற்கு செய்த துரோகத்தை தனது வாயால் சொல்ல அயலி அதை மறைமுகமாக வீடியோ எடுத்து விடுகிறாள். பிறகு அயலி இந்த வீடியோவை காளியப்பனிடம் காட்ட அவன் அதிர்ச்சி அடைகிறான்.
நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோ அது எங்களுக்கு தெரியாது ஆனால் நாளைக்கு நீ இந்த வீட்டை விட்டு வெளியே போயிடனும் என நிபந்தனை விதிக்க காளியப்பன் வேறு வழி இன்றி அதற்கு சம்மதம் தெரிவிக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.