அயலி எபிசோட் அப்டேட்: வெளியான வர்மாவின் போட்டோ... அதிர்ச்சியில் அயலி, சிவா! கடைசியில் என்ட்ரி கொடுத்த கபிலன்!
அயலி எபிசோட்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர் 'அயலி'.
இந்தத் தொடரில் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
சமூக வலைதளங்களில் வெளியான வர்மாவின் புகைப்படம்!
அலுவலகத்தில் சிவா ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் விஜயகுமார், "இன்னும் வீட்டுக்குப் போகலையா?" என்று கேட்கிறார். அதற்கு சிவா, "வர்மாவை இப்படியே விட்டுட்டு எப்படி சார் வீட்டுக்குப் போறது?" என்று தனது கவலையைச் சொல்கிறார்.

உடனே விஜயகுமார், "வர்மாவோட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிடுங்க. அப்போதான் அவனைத் தேடுறோம் என்கிற பயம் அவனுக்கு வரும். இத்தனை நாளா அவனோட புகைப்படம் இல்லாததாலதான் நம்மளால அவனைப் பிடிக்க முடியாம போச்சு. இப்போ புகைப்படம் கிடைச்சிருக்கு, இதை சரியா பயன்படுத்திக்கணும்" என்று சொல்கிறார்.
தன்னுடைய புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான வர்மா!
மறுபக்கம், சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் தன்னுடைய புகைப்படம் வெளியானதைப் பார்த்த வர்மா அதிர்ச்சியில் உறைந்து போகிறான். "எப்படி என்னோட புகைப்படம் வெளியானது? எனக்கு ஒண்ணுமே புரியலையே" என்று பதற்றப்படுகிறான்.
அதுமட்டுமில்லாமல், வர்மாவைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு அரசாங்கம் சார்பில் சன்மானம் வழங்கப்படும் என்றும் செய்திகளில் அறிவிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்த வர்மா, இந்தப் பிரச்சனைகளுக்குgக் கபிலன்தான் காரணம் என்று நினைத்து அவன் மீது கடும் கோபமடைகிறான். கபிலனைச் சும்மா விடக்கூடாது என்றும் முடிவு செய்கிறான்.
இந்திராணி குடும்பத்தினர் கேட்ட கேள்வி!
இதற்கிடையில், தொலைக்காட்சியில் வர்மாவைப் பற்றிய செய்தியை இந்திராணி குடும்பத்தினர் அனைவரும் பார்க்கிறார்கள். அப்போது செழியன், அயலியிடம் "இந்த வர்மாவைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்கிறார். இதைக் கேட்ட அயலி கொஞ்சம் தடுமாறி, "எனக்கு எதுவும் தெரியாது" என்று சமாளிக்கிறாள்.
அதற்கு செழியன், "இது ரொம்பப் பழைய கேஸ். இவனைப் பத்தி நிறைய பேர் தேடிட்டு இருந்தாங்க. உங்க அம்மாதான் இவனைத் தீவிரமா தேடிக்கிட்டு இருந்தாங்க. நாங்களும் பத்திரிகையாளர்கள் தரப்புல நிறைய விசாரிச்சோம். ஆனா கடைசியில இவன் என்ன ஆனான்னே தெரியாம போயிடுச்சு" என்று பழைய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.
அயலியிடம் கோபப்பட்ட சிவா... திடீரென வந்த கபிலன்!
இதற்கிடையில் அயலியின் அறைக்கு வரும் சிவா, "என்ன, இப்போ சந்தோஷமா இருக்கியா? கபிலனைக் காப்பாத்துறதுக்காகத்தானே வர்மா விஷயத்தை வெளியே கொண்டு வந்திருக்க? அதுக்குத்தானே கபிலனும் உனக்கு நன்றி சொன்னான்?" என்று கோபமாகக் கேட்கிறார்.
அதற்கு அயலி, "நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க சிவா. நான் அப்படி எதுவும் செய்யல" என்று விளக்கம் கொடுக்க முயற்சி செய்கிறாள். அந்த நேரத்தில் திடீரென அங்கு வரும் கபிலன், "நான் உள்ளே வரலாமா?" என்று கேட்கிறான்.
திடீரென கபிலனைப் பார்த்த அயலியும் சிவாவும் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.