அயலி சீரியல் அப்டேட்: துப்பாக்கிச் சண்டையில் தப்பித்த வர்மா.. சிவா, அயலிக்கு கிடைத்த புதிய பொறுப்பு!

By Yathrika Nov 28, 2026 05:01 PM GMT
Report

அயலி சீரியல்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘அயலி’.

அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், இன்றைய எபிசோடில் துப்பாக்கிச் சண்டை, வர்மாவின் தப்பிப்பு, சிவா மற்றும் அயலிக்கு கிடைக்கும் புதிய பொறுப்பு என பல பரபரப்பான காட்சிகள் இடம்பெறுகின்றன.

துப்பாக்கிச் சண்டையில் சிக்கிய வர்மா!

காவேரி தொடர்பான வீடியோவை அந்தப் பெண்ணிடம் வர்மா காட்டத் தயாராகிக் கொண்டிருக்கும்போது, திடீரென துப்பாக்கிச் சத்தமும் போலீஸ் சைரன் சத்தமும் கேட்கிறது. அப்போது 'ஐகிரி நந்தினி' பாடல் பின்னணியில் ஒலிக்க, அயலி மாஸாக என்ட்ரி கொடுக்கிறார்.

வந்ததும் அனைவரையும் சுடச் சொல்ல, பதிலுக்கு வர்மாவும் துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடக்கிறது.

ஒரு கட்டத்தில் வர்மா அயலியைச் சுட முயற்சி செய்யும்போது, வெளியிலிருந்து இன்னொரு துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. யார் என்று திரும்பிப் பார்த்தால், அங்கே சிவா வந்து கொண்டிருக்கிறார். சிவா வந்துவிட்டதைப் பார்த்த அயலி, தன்னுடைய அடையாளம் அவருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக உடனே மறைந்து கொள்கிறார்.

இதற்கிடையில் போலீஸ் வந்துவிட்டதாகச் சொல்லி ஷீலா, வர்மாவை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார். அங்கு வந்த சிவா, "ச்சே.. மிஸ் ஆயிட்டாங்களே" என்று ஏமாற்றத்துடன் சொல்கிறார். மறுபக்கம், அயலி அந்தப் பெண்ணிடம் இங்கே நடந்த விஷயங்கள் எதையும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

10 லட்சம் ரூபாய் ரகசியம்.. மும்பைக்குப் புறப்படும் வர்மா!

வீட்டுக்கு வந்த அயலியிடம் குடும்பத்தினர் கேள்வி கேட்கத் தொடங்குகின்றனர். வீட்டுக்கு தொடர்ந்து மிரட்டல் போன்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில், எந்தப் பொறுப்பும் இல்லாமல் எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர்.

அப்போது அயலியிடம் பேசும் சிவா, "அந்த 10 லட்சம் ரூபாயை எதற்காக வாங்கினாய் என்று மட்டும் உண்மையைச் சொல்லு. இதுவரைக்கும் அதற்கு நீ பதில் சொல்லவே இல்லையே" என்று கேட்கிறார். ஆனால் அயலியோ, "என்னால் இப்போதைக்கு அதற்குப் பதில் சொல்ல முடியாது" என்று உறுதியாகக் கூறிவிடுகிறார்.

இதற்கிடையில், ரிச்சர்டின் அம்மாவிடமிருந்து போன் வந்ததாகவும், மும்பையில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் உடனே அங்கே செல்ல வேண்டும் என்றும் ஷீலாவிடம் கூறுகிறார் வர்மா. இதனால் மும்பைக்குப் புறப்படத் தயாராகிறார்.

அயலி, சிவாவுக்கு கிடைத்த வைஸ் பிரசிடென்ட் பதவி!

இதையடுத்து இந்திராணி வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதில், கம்பெனியில் சாதாரண பொறுப்பில் இருந்து வந்த அயலி மற்றும் சிவா இருவருக்கும் வைஸ் பிரசிடென்ட் (Vice President) என்ற பெரிய பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

இதில் ஒருவர் ஆன்மீகப் பிரிவையும், மற்றொருவர் ஜர்னலிசம் பிரிவையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. இதைக் கேட்ட காளியப்பன், அவர்களுக்கு போதுமான அனுபவம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு, "அவர்கள் வேலை பார்த்து அனுபவத்தை வளர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று இந்திராணி பதில் அளிக்கிறார்.

செல்வநாயகியின் குத்தல் பேச்சு.. குழப்பத்தில் உதயப்பெருமாள்!

இதற்கிடையில், மாடியில் நின்று கொண்டு உதயப்பெருமாள் போனில் மிகவும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்க்கும் செல்வநாயகி, "என்ன ஒரே சந்தோஷமா இருக்கீங்க?" என்று கேட்கிறார்.

அதற்கு உதயப்பெருமாள், நம்ம பையனுக்கு வைஸ் பிரசிடென்ட் பதவி கிடைத்திருக்கிறது அல்லவா, அதனால்தான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் செல்லநாயகியோ, "அதெல்லாம் சரிதான். ஆனா, உங்க சங்கரியோட மகனுக்கு வேலை கிடைச்சதுலதான் உங்களுக்கு அதிக சந்தோஷம் போல இருக்கே" என்று குத்தலாகப் பேசுகிறார்.

இதைக் கேட்ட உதயப்பெருமாள், செல்வநாயகி ஏன் இப்படிப் பேசுகிறார் என்று புரியாமல் குழம்புகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US