ஜீ தமிழின் அயலி சீரியல் எப்போது ஆரம்பம்.. வெளிவந்த தேதி மற்றும் நேர விவரம்
சீரியல்
பல வருடங்களுக்கு முன்பு சீரியல்கள் என்றால் சன் டிவி தான்.
ஆனால் இப்போது சன் டிவியை தாண்டி விஜய், ஜீ தமிழிலும் ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவியில் வினோதினி சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது, விஜய் டிவியில் சமீபத்தில் தான் பூங்காற்று திரும்புமா என்ற தொடர் ஆரம்பமானது.
புதிய தொடர்
தற்போது ஜீ தமிழில் அயலி என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலின் முதல் புரொமோ ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது. இந்த நிலையில் சீரியல் எப்போது இருந்து ஆரம்பம் என்ற தகவல் வந்துள்ளது. வரும் ஜுன் 2ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
வீட்டில் குடும்ப குத்துவிளக்காகவும், வெளியில் பத்ரகாளியாகவும் இருக்கும் ஒரு பெண்ணின் கதை.