இந்திராணியின் அப்பாவை கொன்னுட்டாங்களா? வெளிவந்த அதிர்ச்சி தகவல் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

By Yathrika Oct 05, 2026 06:00 AM GMT
Report

அயலி சீரியல்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.

இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் அயலி அத்தை செல்லம்மாவிடம் பேச போக அவர் கோபப்பட்டு திட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது செல்லம்மா மற்றும் ஜமுனா என இருவரும் அயலியை ஏதாவது செய்யணும் என யோசிக்கின்றனர்.

இந்திராணியின் அப்பாவை கொன்னுட்டாங்களா? வெளிவந்த அதிர்ச்சி தகவல் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Ayali Serial Today Episode

அது குறித்து பேசுகின்றனர். மறுபக்கம் அயலி அத்தை திட்டியதால் ரூமில் சோகமாக இருக்க சிவா அவளுக்கு கனகாம்பரம் பூ வாங்கி வருகிறான். அயலி வருத்தமாக இருப்பதை பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்லி சிவா பிறகு பூவை கொடுத்து ரொமான்டிக்காக பேசி நெருங்க இருவரும் ரூமுக்கள் ஓடியாடி விளையாடுகின்றனர்.

அடுத்த நாள் இந்திராணி கபிலனிடம் பாவைக்கு பேச்சி வந்ததால் கோவிலுக்கு செல்ல இருப்பதாக வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்க அயலியும் சிவாவும் வெளியில் கிளம்ப இந்திராணி தடுத்து நிறுத்துகிறார்.

வேலைக்கு வரதா சொல்லிட்டு இன்னும் வராம என்ன பண்றீங்க என்று கேள்வி கேட்க கொஞ்சம் வேலை இருக்கு ஒரு வாரத்தில் வந்து ஜாயின் செய்வதாக சொல்கின்றனர். இந்திராணி ஏற்கனவே 10 நாள் டைம் கேட்டீங்க..

இப்போ இன்னும் ஒரு வாரம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இன்று கோபப்பட செல்வ நாயகி தெரியாதவங்க எல்லாம் வேலைக்கு வச்சா அப்புறம் உங்க அப்பாவை கொன்ன மாதிரி தான் உன்னையும் கொன்னுடுவாங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்திராணியின் அப்பாவை கொன்னுட்டாங்களா? வெளிவந்த அதிர்ச்சி தகவல் - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Ayali Serial Today Episode

சிவா உங்க அப்பாவ கொன்னுட்டாங்களா என்னாச்சு என்று கேட்க இந்திராணி அப்பாவோட கூட இருந்தவர் பணத்தை தேடிட்டு சென்று விட்டதாகவும் அந்த வருத்தத்தில் அப்பா தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்கிறார்.

மேலும் இது கொலை தான் எனவும் இந்திராணி சொல்ல சிவா யார் கொன்னது என்று கேட்க உதயபெருமாள் நீங்க வேலைக்கு கிளம்புங்க என அனுப்பி வைக்கிறார். இருவரும் நாளைக்கு கிளம்ப ரித்திகா அவர்களை தடுத்து நிறுத்தி இங்க வாடி என் அயலியை அழைத்து வீட்டில் உள்ள எல்லோரையும் போன்று கூட்டுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US