ஜீ தமிழின் புதிய தொடர் 'சின்னஞ்சிறு கிளியே’ சீரியல்... Launch Date
சின்னஞ்சிறு கிளியே
முன்னணி தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ், தனது புதிய குடும்பத் தொடரான‘சின்னஞ்சிறு கிளியே தொடரை அறிமுகம் செய்கிறது.
இந்த தொடர் ஜூலை 21 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 7 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடர், பல வேலைகளைச் செய்து தனது குடும்பத்தை நடத்தும் இந்துவின் ( நடிப்பு : ஸ்வாதிகா ) வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
பைக் டேக்சி ஓட்டுவது, உணவு டெல்விவரி, டியூஷன் எடுப்பது என பல வேலைகளை செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறாள். குடும்பத்தின் நிதி நிலையை நிர்வகிக்கும் பொறுப்பு இந்துவிடம் தான் இருக்கிறது.
மறுபக்கம் கந்துவட்டி தொழில் செய்து வரும் கிருபாகரன்( நடிப்பு : ரௌத்திரம் சையத் ) குடும்பம் பெண்கள் என்றாலே அடங்கி தான் போக வேண்டும்.. அவர்களிடம் பணம் போனால் குடும்பம் நாசமாக போகும் என்ற எண்ணத்துடன் வாழ வந்த பெண்களையும் அடிமை போல் நடத்துகின்றனர், கிருபாகரனின் விசுவாசியாக இருக்கும் கர்ணாவுக்கும் ( நடிப்பு : நரேஷ் ) இந்துவுக்குமான சந்திப்பு மோதலில் முடிகிறது.
ஒரு கட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் கர்ணாவுக்கும் இந்துவுக்கும் திருமணம் நடந்து கிருபாகரன் வீட்டிற்கு வாழ வருகிறாள்.
இதுவரை சுதந்திர பறவையாக சுற்றி வந்த இந்துவின் வாழக்கையில் நடக்கப்போவது என்ன? இந்து சிறகு உடைந்து சிறைக்குள் சிக்கி தவிப்பாளா? சிறையை தகர்த்து விண்ணை நோக்கி பறப்பாளா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.
மேலும் இந்த சீரியலில் மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூலை 21 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு, உங்கள் ஜீ தமிழில் புத்தம் புதிய தொடர்பான சின்னஞ்சிறு கிளியே சீரியலை காணத்தவறாதீர்கள்.