டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள்
தமிழர்கள் எல்லா கலையையும் கொண்டாடுபவர்களாக உள்ளார்கள். பரதநாட்டியமும் ரசிப்பார்கள், டப்பாங்குத்தும் ரசிப்பார்கள்.
கலையின் மீது ஆர்வம் கொண்ட ரசிகர்களுக்காகவே பல தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகள் அதிகம் ஒளிபரப்பாகி வருகின்றன.
அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸ், பல சீசன்களுக்கு பிறகு இப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 என்ற புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
மொத்தம் 24 போட்டியாளர்களுடன் மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியை மணிமேகலை, விஜய் தொகுத்து வழங்க சினேகா, வரலட்சுமி மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
சர்ப்ரைஸ்
இந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் 80ஸ் ரவுண்ட் நடக்க உள்ளது. இந்த வாரத்திற்கான புரொமோவில் பிரபல நடிகர் ஆனந்த பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது தெரிய வருகிறது.
அதேபோல் கடந்த எபிசோடில் பஞ்சமியை உணவு அருந்த குடும்பத்துடன் தனது வீட்டிற்கு அழைத்த சரத்குமார் அதன்படி அவர்களை சிறப்பாக கவனித்துள்ளார்.
அதோடு இந்த வாரம் ஒரு போட்டியாளருக்கு போன் மூலம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதோ புரொமோ,