கெட்டி மேளம் சீரியல் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ
கெட்டி மேளம்
கன்னடத்தில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி நிவாஸா என்ற தொடரின் ரீமேக்காக ஜீ தமிழில் ஓடும் தொடர் தான் கெட்டி மேளம்.
இந்த வருடம் (2025) ஜனவரி 20ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரில் பிரவீணா, பொன்வண்ணன், சாயா சிங், ஸ்ரீகுமார், விராட், சௌந்தர்யா ரெட்டி என பலர் நடிக்கிறார்கள்.

110 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தம்பதி வீடு கட்டி தங்களது மகன், மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் கனவை நோக்கியது இந்த கதை.
நிச்சயதார்த்தம்
இந்த தொடரில் நடிக்கும் ஒரு நடிகருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகர் சுதர்சனத்திற்கு தான் சமீபத்தில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.