சிப்பு சூரியன் என பலர் நடிக்கும் ஜீ தமிழின் கெட்டி மேளம் தொடர் எப்போது ஆரம்பம்... வெளிவந்த தகவல்
ஜீ தமிழ்
ஜீ தமிழ் நிறுவனம் பல விதமான சீரியல்களை மேட்னி மற்றும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பி வருகிறது.
ஆனால் டிஆர்பியில் சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் முன்னிலை வகித்து வருகிறது. தங்களது டிஆர்பியை உயர்த்த ஜீ தமிழ் புதிய யோசனையில் இறங்கி ஒரு விஷயம் செய்துள்ளனர்.
கெட்டி மேளம்
அதாவது விரைவில் ஜீ தமிழில் கெட்டி மேளம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. ரோஜா சீரியல் புகழ் சிபு சூரியன், அன்பே வா தொடர் புகழ் விராத், பிரவீனா, சௌந்தர்யா ரெட்டி, பொன்வண்ணன் என பலர் நடிக்கிறார்கள்.
இந்த தொடரின் புரொமோ சில வெளியாகியுள்ளது, இந்த தொடர் டிஆர்பியை ஏற்றலாம் என யோசித்து கெட்டி மேளம் சீரியலை 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்களாம்.
அதோடு இந்த சீரியல் வரும் ஜனவரி 20ம் தேதி முதல் இரவு 7.30 முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.