ஜீ தமிழின் இதயம் 2 சீரியலில் விஜய் டிவியின் ஹிட் சீரியல் வில்லி.. புரொமோவுடன் இதோ
இதயம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், அண்ணா, வீரா, இதயம் என நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது இதயம். இந்த தொடர் குறித்த தகவல்கள் தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
முதலில் இந்த தொடரில் பாரதியாக நடித்துவந்த ஜனனி அசோக் தொடரில் இருந்து விலகுவதாக கூறினார், அதுவே ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவலாக இருந்தது.
புரொமோ
பிறகு இதயம் 2 சீரியலில் பாரதியாக பிரபல நடிகை பல்லவி கௌடா நடிக்க இருப்பதாக தகவல் வந்தன. அடுத்த நாளே இதயம் 2 தொடரின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பழைய கேரக்டருக்கு புதியதாகவும் பலர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
அதில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் மோசமான வில்லியாக நடித்து கலக்கிய பரீனாவும் இருக்கிறார். இதோ இதயம் 2 தொடரின் புரொமோ,