ஜீ தமிழின் இதயம் 2 சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியது... புதிய ஜோடியின் போட்டோ
இதயம்
இதயம் என பெயர் கேட்டதுமே வெள்ளித்திரை ரசிகர்கள் நிறைய பட பாடல்களை பாட தொடங்கிவிடுவார்கள். ஆனால் சின்னத்திரை ரசிகர்கள் இதயம் என கேட்டால் உடனே ஒரு தொடரை தான் நினைப்பார்கள்.
ஜீ தமிழில் கடந்த 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் இதயம் தொடர். ரசிகர்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரின் முதல் சீசனை முடித்துள்ளார்.
650 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடரின் 2ம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
புதிய ஜோடி
இந்த 2வது பாகத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி அசோக்குமார் தொடரில் இருந்து விலக புதிய நாயகி கமிட்டாகியுள்ளார். புதிய பாரதியாக நடிகை பல்லவி கௌடா நடிக்க இருக்கிறாராம்.
இதயம் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. புதியதாக களமிறங்கிய சீரியல் ஜோடியின் ப்ளர் இமேஜ் தான் வெளியாகியுள்ளது. விரைவில் அவர்களை திரையில் காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.