கார்த்திக், ரேவதியை பிரிக்க பஞ்சாயத்து கூட்டிய சாமுண்டீஸ்வரி..- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

By Yathrika Aug 21, 2026 06:00 AM GMT
Report

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மற்றும் ரேவதியைப் பிரிக்க புதிய திட்டத்தை தீட்டிய நிலையில், இன்று நடைபெறவுள்ள சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

அதாவது, சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டி, கார்த்திக் தன்னுடைய மகளை ஏமாற்றி அழைத்து வந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். மேலும், ஏற்கனவே பஞ்சாயத்தில் வைத்து அவர்களை காசு வெட்டி பிரித்து விட்டதாகவும் முறையிடுகிறார்.

கார்த்திக், ரேவதியை பிரிக்க பஞ்சாயத்து கூட்டிய சாமுண்டீஸ்வரி..- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam Serial Episode

இதையடுத்து கார்த்திக், ரேவதி முழு மனதோடு தான் தன்னுடன் வந்ததாக பஞ்சாயத்தாரிடம் தெரிவிக்கிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி அதனை ஏற்க மறுத்து, ரேவதியையே நேரில் அழைத்து வந்து பதில் சொல்ல வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இதனால் ரேவதியை பஞ்சாயத்துக்கு அழைத்து வரும் சூழ்நிலை உருவாகிறது. பஞ்சாயத்தில் ஆஜராகும் ரேவதி, “நான் முழு மனதோடு தான் கார்த்தியுடன் வந்தேன். எங்களை காசு வெட்டி பிரித்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்க வேண்டும்” என உறுதியாக கூறுகிறார்.

ரேவதியின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்தார், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகின்றனர். இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தியடைந்த சாமுண்டீஸ்வரி, பஞ்சாயத்தாரிடம் கோபம் காட்டி, “உங்களால் இவ்வளவுதான் செய்ய முடியுமா? இதை நான் வேறு விதமாக பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.

கார்த்திக், ரேவதியை பிரிக்க பஞ்சாயத்து கூட்டிய சாமுண்டீஸ்வரி..- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam Serial Episode

அதன்பிறகு கார்த்திக், சாமுண்டீஸ்வரியை சந்தித்து, “ரேவதி முழு மனதோடு தான் என்னுடன் வந்தார் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்” என்று நேருக்கு நேர் பேசுகிறார். இந்நிலையில், அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? சாமுண்டீஸ்வரி அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US