கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றிய அருணின் இதயம்...
கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து அதிர்ச்சியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
ட்ரோன் மூலம் இதயத்தைக் கொண்டு சென்ற கார்த்திக், சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றிய நிலையில், அருணின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியான உண்மையும் தற்போது வெளியாகியிருக்கிறது.

வெற்றிகரமாக முடிந்த இதய மாற்று அறுவை சிகிச்சை!
கார்த்திக் ட்ரோன் மூலம் கொண்டு வந்த இதயத்தை வைத்து, மருத்துவர்கள் சாமுண்டீஸ்வரிக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதனால் சாமுண்டீஸ்வரி உயிர் பிழைத்து விடுகிறார். இந்தச் செய்தியைக் கேட்ட குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.
அதிர்ச்சியைக் கொடுத்த மயில்வாகனம்!
ஒருபக்கம் சாமுண்டீஸ்வரி உயிர் பிழைத்த சந்தோஷத்தில் குடும்பத்தினர் இருக்க, மறுபக்கம் மயில்வாகனம் ஒரு அதிர்ச்சியான உண்மையைச் சொல்கிறார். சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தப்பட்ட இதயம் அருணுடையது என்ற உண்மையை அவர் வெளிப்படுத்துகிறார்.
இதயத்தைக் கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் அருண் உயிரிழந்து விட்டதாகவும், அவர் இறந்த பிறகு தான் அவருடைய இதயம் சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல், அருண் இறந்த விஷயத்தைக் கார்த்திக் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
இதைக் கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். சாமுண்டீஸ்வரி உயிர் பிழைத்த சந்தோஷத்தில் இருக்க வேண்டுமா, இல்லை அருணை இழந்த துக்கத்தில் அழ வேண்டுமா என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
விபத்தா, திட்டமிட்ட சதியா? விசாரணையில் இறங்கும் போலீஸ்!
இதற்கிடையில், காவல் ஆய்வாளர் கார்த்திக்கைத் தொடர்பு கொண்டு ஒரு முக்கியமான தகவலைச் சொல்கிறார். ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியது வெறும் விபத்தாகத் தெரியவில்லை என்றும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கிறார்.
மேலும், அந்த லாரி யாருடையது, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதைத் தீவிரமாக விசாரித்து உண்மையைக் கண்டுபிடிப்பதாகவும் கார்த்திக்கிடம் உறுதியளிக்கிறார். இதனால் அருணின் மரணத்துக்குப் பின்னால் ஏதாவது சதி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கண்ணீருடன் நடைபெற்ற அருணின் இறுதிச்சடங்கு!
மறுபக்கம், அருணின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ராஜராஜன், கார்த்திக் உள்ளிட்டோர் கண்ணீருடன் அவருக்கு இறுதிச்சடங்கு செய்கிறார்கள்.
சந்திரகலாவுக்கு ஏமாற்றம்... குடும்பத்தினருக்கு நிம்மதி!
இதற்கிடையில், அறுவை சிகிச்சை முடிந்து சாமுண்டீஸ்வரி மெல்லக் கண் விழிக்கிறார். இந்தத் தகவலைச் நர்ஸ் சந்திரகலாவிடம் தெரிவிக்கிறார். சாமுண்டீஸ்வரி உயிர் பிழைக்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திரகலா, அவர் கண்விழித்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார். அவருடைய திட்டம் தோல்வியடைந்ததால் கடும் ஆத்திரமும் அடைகிறார்.
இறுதியில், ரேவதி, கார்த்திக் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் சாமுண்டீஸ்வரியை நேரில் சந்திக்கிறார்கள். அவர் உயிர் பிழைத்து மீண்டும் கண்விழித்ததைப் பார்த்து நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். அருணின் மரணம் விபத்தா, இல்லை யாராவது திட்டமிட்டு நடத்திய சதியா?
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan