சிவனாண்டிக்கு தயாராகும் ஸ்கெட்ச்.. கார்த்திக்காக சமையலில் அசத்தும் ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
நேற்றைய எபிசோடில் ரேவதி, கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸை நினைத்து மகிழ்ச்சியில் இருந்த நிலையில், இன்று பல பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.

கார்த்திக்காக விதவிதமாக சமைத்து கொடுக்க முடிவு செய்யும் ரேவதி, கீழே கிச்சனுக்கு வந்து அங்கிருந்த ரோகிணி மற்றும் சுவாதியை நைசாக அனுப்பிவிட்டு சமையல் வேலையில் இறங்குகிறாள்.
கார்த்திக்குப் பிடித்த சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை அன்புடன் சமைக்கிறாள். பின்னர், தனது தோழிக்காக உணவு எடுத்துச் செல்வதாக சாமுண்டீஸ்வரியிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறாள். அதன்பிறகு சந்திரகலாவை சந்தித்து, இந்த உணவுகள் அனைத்தும் கார்த்திக்காகத்தான் என்று உண்மையை கூறுகிறாள்.

இதையடுத்து சந்திரகலா, சாமுண்டீஸ்வரியிடம் இந்த விஷயத்தை போட்டுக் கொடுக்க, சாமுண்டீஸ்வரி சந்திரகலாவை நம்பாமல் கடும் எரிச்சலை வெளிப்படுத்துகிறாள். மறுபக்கம், மயில்வாகனம் சிங் என்ற வேடத்தில் முத்துவேலை சந்தித்து, வெளிநாட்டில் இருந்து வந்த தொழிலதிபர் என அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.

தனக்கு சிவனாண்டியின் தொடர்பு வேண்டும், அவருடன் தொழில் செய்ய விருப்பம் இருப்பதாக கூறுகிறான். முத்துவேலும் அவனை சிவனாண்டியிடம் அறிமுகப்படுத்துகிறான். அப்போது கோவில் நகைகளை கைப்பற்றித் தந்தால் ரூ.5 கோடி தருவதாக ஆசை வார்த்தை கூறி, சிவனாண்டியை தனது வலையில் சிக்க வைக்க முயல்கிறான் மயில்வாகனம்.
இந்த தகவலை கார்த்திக்குத் தெரிவிக்க, அவர் அடுத்த கட்ட திட்டத்தை தீட்டத் தொடங்குகிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், கார்த்திக்காக சமைத்த உணவுகளுடன் ரேவதி அவரை சந்திக்க வருகிறாள்.
சிவனாண்டி மயில்வாகனத்தின் திட்டத்தில் சிக்குவாரா? கார்த்திக்கின் அடுத்த பிளான் என்ன? ரேவதி - கார்த்திக் சந்திப்பில் என்ன நடக்கப் போகிறது? என்பதைக் காண கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு IBC Tamilnadu