ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்... சந்தோஷத்தில் ரேவதி, ஷாக்கான சாமுண்டீஸ்வரி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

By Yathrika Sep 07, 2026 08:00 AM GMT
Report

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

கடந்த எபிசோடில் ராஜராஜன் சாமி பற்றிய உண்மை சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்த நிலையில், இன்று நடைபெறவிருக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளன. ராஜராஜன் குறித்த உண்மையை அறிந்த சாமுண்டீஸ்வரி கடும் கோபமடைகிறாள்.

இதையடுத்து ராஜராஜனை நேரடியாக சந்தித்து சரமாரியாக திட்டி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறாள். மறுபக்கம், கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் ரேவதி பரதநாட்டியம் ஆடவுள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.

ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்... சந்தோஷத்தில் ரேவதி, ஷாக்கான சாமுண்டீஸ்வரி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

இதற்காக சிறப்பு போஸ்டர்கள் தயாரிக்கப்பட்டு ஊர் முழுவதும் ஒட்டப்படுகின்றன. இதனால் ரேவதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். இந்த நேரத்தில் சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை அழைத்து அந்த போஸ்டரை காட்டுகிறாள்.

அதில் ரேவதி, "ராஜராஜன் - சாமுண்டீஸ்வரி மகள்" என குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்த சாமுண்டீஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே ரேவதியின் வீட்டிற்கு சென்று, "நீதான் என் பொண்ணு இல்லன்னு சொல்லி இருக்கேன்ல... அப்படி இருக்கும்போது எதுக்கு போஸ்டர்ல எங்க பேரைப் போட்டிருக்க?" என்று கோபமாக கேள்வி எழுப்புகிறாள்.

ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்... சந்தோஷத்தில் ரேவதி, ஷாக்கான சாமுண்டீஸ்வரி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

இதனைத் தொடர்ந்து, வெளியே சென்றிருக்கும் கார்த்தியின் கைக்கு ஒரு நோட்டீஸ் கிடைக்கிறது. அதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார்.

இந்த சம்பவங்கள் அடுத்து என்ன திருப்பத்தை ஏற்படுத்தப் போகின்றன? கார்த்திக் கையில் கிடைத்த நோட்டீஸில் என்ன இருக்கிறது? சாமுண்டீஸ்வரியின் அடுத்த முடிவு என்ன? பரபரப்பான இந்த காட்சிகளை காண, கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US