கத்தி முனையில் கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் செய்யப் போவது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை போட்டு தள்ள சிவனாண்டி திட்டமிட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ரோகிணியும் ரேவதியும் பேசிக்கொண்டிருக்க அப்போது ராஜராஜனே கோவில் கும்பாபிஷேகத்திற்காக அழைக்க கார்த்திக் வீட்டுக்கு வர சந்திரகலா ரேவதி கார்த்தியை பார்க்கக்கூடாது என திட்டமிட்டு அவள் இருக்கும் ரூமை பூட்டி வைக்கிறாள்.
கார்த்திக் ரேவதி பார்க்க முடியுமா என காத்திருந்து காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்ப ரேவதி ஜன்னல் வழியாக கார்த்திக்கை பார்க்கிறாள். அதன் பிறகு சந்திரகலா சாமுண்டீஸ்வரி சந்தித்து ஒரு நிலத்தை வாங்குவதற்காக கிளம்புகிறாள்.

காரில் ஏறியதும் சிவனாண்டிக்கு தகவல் கொடுக்க அவனது ஆட்கள் ஒரு இடத்தில் கத்தி முனையில் இருவரையும் கடத்துகின்றனர். ஒரு குடோன் அருகே சாமுண்டீஸ்வரியின் கார் இருக்க அந்த வழியாக வந்த யூ வியாபாரி ஒருவர் காரில் இருக்கும் போனை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்கிறார்.
கார்த்தியிடம் விஷயத்தைச் சொல்ல சாமுண்டீஸ்வரி ஏதோ ஆபத்தில் இருப்பதை கார்த்திக் உணர்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.