மீண்டும் கல்யாணமா? ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

By Yathrika Sep 28, 2026 05:00 AM GMT
Report

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ரேவதி கார்த்திக் போட்டோவை வைத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி அதை பார்த்து கடுப்பாகின்றனர்.

மீண்டும் கல்யாணமா? ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி எழுந்து ரூமுக்குள் சென்று விடுகிறாள். பின்னாடியே சென்ற சந்திரகலா இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு ரேவதிக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் என்று சொல்லி சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்கிறாள்.

மறுபக்கம் கார்த்தி கான்ஸ்டபிள் மனைவி குறித்து விசாரிக்க அவர் சாமுண்டீஸ்வரி வீட்டில் பரமேஸ்வரி என்ற பெயரில் வேலை செய்பவர் தான் என்பது தெரிய வருகிறது. மேலும் இங்கே ரேவதி வாந்தி எடுப்பது போல நடிக்க சாமுண்டீஸ்வரி என்னாச்சு என்று கேட்க குட்டி கார்த்திக் கம்மிங் என வெறுப்பேற்றுகிறாள்.

மீண்டும் கல்யாணமா? ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

மேலும் சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்த விஷயத்தை சொல்லி ஒரு வயதான ஒருவனை பிடித்து ரேவதிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என திட்டமிடுகின்றனர்.

கார்த்திக் பரமேஸ்வரி ஃபோட்டோவை அனுப்பி விசாரிக்க ரேவதி அவர் திருப்பதி சென்று இருப்பதாக சொல்ல கார்த்திக் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து பின் தொடர சொல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US