உண்மையைச் சொன்ன ரேவதி; சாமுண்டீஸ்வரியிடம் எல்லாத்தையும் உடைத்த கார்த்திக்!.. கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், கல்யாண மேடையில் நடக்கும் அதிரடி திருப்பங்களும், அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகளும் பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன.
ரேவதிக்குக் கிடைத்த முக்கியமான ஆதாரம்!
[
கூறைப் புடவையைத் தேடி வீட்டுக்குள் போகும் ரேவதி, ஒருவழியாக அதைக் கண்டுபிடிக்கிறாள். அப்போது திடீரென ஒரு சொம்பு உருண்டு கீழே விழும் சத்தம் கேட்கிறது.
பூனை ஏதாவது ஓடியிருக்கும்னு நினைச்சு அங்கே போய்ப் பார்க்கும்போது, தரையில் ஒரு தங்கச் செயின் கிடப்பதைப் பார்க்கிறாள். அந்தச் செயினை எடுத்துக்கொண்டு சுவாதியிடம் காட்ட, அது சதீஷோட செயின் என்பது தெரியவருகிறது. சதீஷோட செயின் இங்கே எப்படி வந்தது என்று ரேவதி யோசிக்கிறாள். ஒரு கட்டத்தில், சதீஷ் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அவளுக்கு வருகிறது.
உடனே இந்த விஷயத்தை கார்த்திக் மற்றும் மயில்வாகனத்திடம் தெரிவிக்கிறாள்.
சதீஷைக் கடத்தி வேறு இடத்துக்கு மாற்றிய கும்பல்!
ரேவதி சொன்ன தகவலைக் கேட்டதும் கார்த்திக்கும் மயில்வாகனமும் உடனே சதீஷின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்கிறார்கள். ஆனால், அங்கே சதீஷைக் கட்டிப்போட்டு வைத்திருந்ததற்கான அடையாளங்கள் மட்டும்தான் கிடைக்கின்றன.
கார்த்திக் வரப்போவது தெரிந்ததாலோ என்னவோ, அதற்குள் சதீஷை வேறொரு இடத்துக்கு மாற்றிவிடுகிறார்கள். இதனால் சதீஷ் எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் கார்த்திக்கும் மயில்வாகனமும் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.
சாமுண்டீஸ்வரியிடம் உண்மையைப் போட்டு உடைத்த கார்த்திக்!
இதற்கிடையில், இன்னொரு பக்கம் மகேஷ் பதற்றத்தில் இருக்கிறான். அவனைச் சமாதானப்படுத்தும் சந்திரகலா, எப்படியாவது தாலியைக் கட்டி கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறாள்.
ஆனால், உண்மையைத் தெரிந்துகொள்ள நினைக்கும் கார்த்திக், கையில் எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் நேராக சாமுண்டீஸ்வரியைச் சந்திக்கிறார். சுவாதியும் சதீஷும் ஒருவரையொருவர் காதலித்து வந்த விஷயத்தையும், இப்போது கல்யாண மேடையில் சதீஷ் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது மகேஷ் என்பதையும் கார்த்திக் அவரிடம் தெளிவாகச் சொல்கிறார். அதுமட்டுமில்லாமல், இந்த மொத்த சதித்திட்டத்துக்குப் பின்னாடி சந்திரகலா இருப்பதையும் வெளிப்படையாகப் போட்டு உடைக்கிறார்.

கார்த்திக் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றாலும், ஏற்கெனவே சாமுண்டீஸ்வரிக்கு இருந்த சந்தேகம் இப்போது இன்னும் அதிகமாகிறது. இதனால் கல்யாணத்தில் ஏதோ பெரிய தில்லுமுல்லு நடக்கிறது என்ற எண்ணம் அவருக்கு வலுக்கிறது.
கார்த்திக்கைக் கொல்ல சந்திரகலா போட்ட திட்டம்!
இன்னொரு பக்கம், கார்த்திக்கைத் தீர்த்துக்கட்ட சந்திரகலா ஆட்களை ஏவி சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
இதற்கிடையில், சதீஷ் எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க கார்த்திக்கும் மயில்வாகனமும் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில், சாமுண்டீஸ்வரி வீட்டை நோக்கி இருவரும் விரைகிறார்கள்.
மண்டபத்தில் ஐயர் மந்திரம் சொல்ல, கல்யாண நேரமும் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் கார்த்திக் சதீஷைக் கண்டுபிடித்து கல்யாணத்தை நிறுத்துவாரா? சந்திரகலாவின் சதித்திட்டம் அம்பலமாகுமா? இல்லையென்றால், கடைசி நேரத்தில் சந்திரகலாவே தன் திட்டத்தில் வெற்றி பெறுவாளா? இந்த அதிரடி திருப்பங்களைக் காணத் தவறாதீர்கள்.
‘கார்த்திகை தீபம்’ – திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு, உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில்!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri