கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி... இதயத்தைத் தேடி அலையும் கார்த்திக்!

By Yathrika Oct 28, 2026 06:00 AM GMT
Report

கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், சாமுண்டீஸ்வரியின் உயிரைக் காப்பாற்ற கார்த்திக் போராட இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி... இதயத்தைத் தேடி அலையும் கார்த்திக்! | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

ஐசியூ-வில் சாமுண்டீஸ்வரி... கதறி அழும் பாட்டி! 

ஜெயிலில் இருந்து வெளியே வரும் பாட்டி, நேராக மருத்துவமனைக்குச் செல்கிறார். அங்கே ஐசியூ-வில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுகிறார்.

அறுவை சிகிச்சை முடிந்துவிட்டாலும், சாமுண்டீஸ்வரியின் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதால், உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் கிடைத்தால் மட்டுமே சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்ற முடியும் என்ற தகவல் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இதற்கிடையில், கல்யாணக் கோலத்தில் மருத்துவமனைக்கு வரும் ஸ்வாதி, இந்த நேரத்தில் இப்படியொரு பிரச்சினை வந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறார். அப்போது அங்கிருக்கும் நர்ஸ், அனைவரையும் வெளியே செல்லும்படி கூறுகிறார்.

சந்திரகலாவின் அடுத்த கொடூரமான சதி!   

மறுபக்கம், சந்திரா மஹாலில் இருக்கும் சந்திரகலாவிடம், மருத்துவமனை நர்ஸ் சாமுண்டீஸ்வரியின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் சந்திரகலா நேராகக் காவல் நிலையத்துக்குச் சென்று சிவனாண்டியைச் சந்திக்கிறார்.

அப்போது, “சாமுண்டீஸ்வரிக்கு இதயம் கிடைக்காது. அவள் சாகத்தான் போகிறாள். அவளுடைய இடத்தில் உன்னை உட்கார வைக்கிறேன்” என்று தன்னுடைய கொடூரமான திட்டத்தைப் பகிர்ந்துகொள்கிறார். சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்திலும், சந்திரகலா தனது பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடுவதாக இல்லை.

தாயைக் காப்பாற்றப் போராடும் கார்த்திக்! 

இதற்கிடையில், மருத்துவர் செழியனைச் சந்திக்கும் கார்த்திக் மற்றும் இளையராஜா, சாமுண்டீஸ்வரியின் நிலைமையைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்கிறார்கள். உடனே அவருக்கு இதயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்.

கார்த்திக் தனது அண்ணன் அருணுக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறார். அப்போது அருண், “உன்னை இவ்வளவு கொடுமைப்படுத்திய பிறகும், நீ அவர்களுக்காக இவ்வளவு தூரம் நிற்கிறாயே!” என்று நெகிழ்ந்து பேசுகிறார்.

ஆனால், கார்த்திக்கோ, “இப்போ இதையெல்லாம் பேசுறதுக்கு நேரமில்லை. அத்தையைக் காப்பாத்தணும்” என்று சொல்லிவிட்டு, அருண் மற்றும் இளையராஜாவுடன் சேர்ந்து இதயத்தைத் தேடும் முயற்சியில் இறங்குகிறார். 

கோயிலில் சாமுண்டீஸ்வரிக்காக உருகி வேண்டிக்கொள்ளும் குடும்பத்தினர்!

மருத்துவமனையில் சாமுண்டீஸ்வரியின் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்க, மறுபக்கம் பாட்டி, ரோகிணி, ரேவதி மற்றும் ஸ்வாதி ஆகியோர் கோயிலுக்குச் செல்கிறார்கள். அங்கே சாமுண்டீஸ்வரி மீண்டும் நலமாக வேண்டும், அவருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று மனமுருகி வேண்டிக்கொள்கிறார்கள்.

ஐசியூ-வுக்குள் நுழைந்த சந்திரகலா... சாமுண்டீஸ்வரிக்கு அடுத்த ஆபத்து!

இப்படியொரு இக்கட்டான சூழலில், சந்திரகலா தனது அடுத்த சதியை அரங்கேற்றுகிறார். நர்ஸின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் ஐசியூ-வுக்குள் நுழைகிறார். அங்கே நினைவில்லாமல் படுத்திருக்கும் சாமுண்டீஸ்வரியைப் பார்த்து, “உன்னோட வாழ்க்கை இத்தோட முடிஞ்சது. இனிமேல் உன்னோட சொத்து, உன்னோட ஸ்தானம் எல்லாமே எனக்குத்தான்!” என்று வன்மத்துடன் பேசுகிறார்.

ஏற்கெனவே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரிக்கு இப்போது சந்திரகலாவால் இன்னொரு ஆபத்தும் காத்திருக்கிறது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது?

சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றுவதற்காக கார்த்திக் சரியான நேரத்தில் இதயத்தைக் கண்டுபிடிப்பாரா? சந்திரகலாவின் சதித் திட்டத்தை முறியடிப்பாரா? உயிருக்குப் போராடும் சாமுண்டீஸ்வரி மீண்டும் கண் விழிப்பாரா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US