கார்த்திகை தீபம் சீரியல்: விபத்தில் சிக்கிய அருண்... உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுத்த அதிரடி முடிவு!

By Yathrika Oct 30, 2026 06:30 AM GMT
Report

கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படும் இதயத்தைப் பின்தொடர்ந்து, அருண் உள்ளிட்டோர் காரில் செல்வதுடன் முந்தைய எபிசோடு முடிந்தது.

இதற்கிடையில், சந்திரகலாவின் திட்டப்படி லாரி டிரைவர் மூக்கையா, அந்த ஆம்புலன்ஸை வழிமறித்து துரத்துகிறான். இதனால் எதிர்பாராத விதமாக அருணின் கார் பயங்கர விபத்தில் சிக்குகிறது.

கார்த்திகை தீபம் சீரியல்: விபத்தில் சிக்கிய அருண்... உயிரைக் காப்பாற்ற கார்த்திக் எடுத்த அதிரடி முடிவு! | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

விபத்தில் சிக்கிய அருணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறுகிறது.

சந்திரகலாவின் சதித்திட்டம் வெற்றி!

விபத்து நடந்த தகவலை மூக்கையா, மருதுவிடம் தெரிவிக்கிறான். மருதுவும் உடனே சந்திரகலாவிடம் இதைப் பற்றிச் சொல்ல, தன்னுடைய திட்டம் வெற்றியடைந்துவிட்டதாக நினைத்து சந்திரகலா சந்தோஷப்படுகிறாள்.

மறுபக்கம், கார்த்திக் பலமுறை அருணுக்குப் போன் செய்தும் அவன் அழைப்பை எடுக்காததால், கார்த்திக்குச் சந்தேகம் அதிகமாகிறது.

அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா!

இதற்கிடையில், விபத்தைப் பார்த்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். மருத்துவமனையில் இளையராஜாவுக்குச் சுயநினைவு திரும்பியதும், விபத்தில் அருண் உயிரிழந்துவிட்ட அதிர்ச்சியான செய்தி தெரியவருகிறது.

இதைக் கேட்டதும் இளையராஜா நிலைகுலைந்து போகிறான். அருணை இழந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் மருத்துவமனையிலேயே கதறி அழுகிறான். இந்தச் செய்தியை இளையராஜா, கார்த்திக்கிடம் சொல்ல, அவனாலும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

செய்வதறியாமல் தவிக்கும் கார்த்திக், மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து கதறி அழுகிறான். அப்போது அங்கு வரும் மயில்வாகனம் என்ன நடந்தது என்று கேட்க, நடந்த விஷயங்களைச் சொல்லும் கார்த்திக், இந்தச் செய்தியை இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான்.

உடைந்த இதயம்... கார்த்திக் எடுத்த அதிரடி முடிவு!

இதற்கிடையில், சாமுண்டீஸ்வரியின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காகக் கொண்டு வரப்பட்ட இதயம் விபத்தில் சேதமடைந்துவிட்டதால், அதை இனி அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

அதே நேரத்தில், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த அருணின் இதயம் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்தமாக இருக்கும் என்பது தெரியவருகிறது. ஒருபக்கம் சொந்தத்தை இழந்த சோகத்தில் இருந்தாலும், மறுபக்கம் தன்னுடைய அத்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் கார்த்திக் உறுதியாக இருக்கிறான்.

இதனால், அருணின் இதயத்தைச் சாமுண்டீஸ்வரிக்குப் பொருத்த கார்த்திக் துணிச்சலான முடிவை எடுக்கிறான். அதுமட்டுமில்லாமல், இந்த விஷயம் குடும்பத்தில் யாருக்கும் தெரியக்கூடாது என்றும் முடிவு செய்கிறான்.

கடைசி நிமிடத்தில் நடக்கும் போராட்டம்!

மறுபக்கம், சாமுண்டீஸ்வரியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கான நேரமும் குறைந்துகொண்டே வருகிறது. இந்தச் சூழலில், கார்த்திக் ஸ்பை நர்ஸ் மூலமாக இதயம் தயாராக இருப்பதாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கிறான். இதையடுத்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தொடங்குகிறார்கள்.

இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய பிறகும் எப்படி மீண்டும் இதயம் கிடைத்தது என்று தெரியாமல் சந்திரகலா குழம்பிப் போகிறாள். மறுபக்கம், அருணின் உடலிலிருந்து இதயத்தைப் பாதுகாப்பாக எடுத்து, மற்ற உறுப்புகளையும் தானத்திற்காக முறைப்படி ஒப்படைத்துவிட்டு, அந்த இதயத்துடன் கார்த்திக் சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு விரைந்து வருகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US