கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சந்திரகலாவுக்கு செக் வைத்த கார்த்திக்... சொந்த வீட்டை மீட்டு சாமுண்டீஸ்வரி!

By Yathrika Nov 11, 2026 08:00 AM GMT
Report

கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சாமுண்டீஸ்வரியின் சொத்துக்களை அபகரிக்க நினைத்த சந்திரகலாவின் திட்டத்தை கார்த்திக் தவிடுபொடியாக்கி, மீண்டும் தனது புத்திசாலித்தனத்தை நிரூபித்திருக்கிறார்.

நீதிமன்றத்தில் சிக்கிய சந்திரகலா... ரூ.50 ஆயிரம் அபராதம்!

சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு வருகிறது. அப்போது சாமுண்டீஸ்வரிக்குத் தெரியாமலேயே அவருடைய சொத்துக்களைத் தனது பெயருக்கு எழுதி வாங்கிய உண்மையை சந்திரகலா நீதிபதியிடம் ஒப்புக்கொள்கிறார்.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சந்திரகலாவுக்கு செக் வைத்த கார்த்திக்... சொந்த வீட்டை மீட்டு சாமுண்டீஸ்வரி! | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Episode

இதைக் கேட்ட நீதிபதி, இந்தச் சொத்துக்கும் சந்திரகலாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கிறார். அதோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக சந்திரகலாவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கிறார்.

கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்... அதிர்ச்சியில் சந்திரகலா!

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சந்திரகலாவிடம் கார்த்திக்கும் மயில்வாகனமும் ஒரு உண்மையைச் சொல்கிறார்கள். செங்கல் சூளையில் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையான பிணம் கிடையாது என்றும், அது அவர்கள் வைத்த டம்மி உடல் என்றும் கூறுகிறார்கள்.

காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் மயில்வாகனத்துடன் சேர்ந்து, சந்திரகலாவை உண்மையை ஒப்புக்கொள்ள வைக்கத்தான் இந்தத் திட்டத்தைப் போட்டதாக கார்த்திக் விளக்குகிறார். இதைக் கேட்ட சந்திரகலா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மேலும், இனிமேல் இதுபோன்ற தேவையில்லாத வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கார்த்திக் அவரை எச்சரிக்கிறார்.

லாக்-அப்பில் சிவனாண்டி... சீல் வைக்கப்பட்ட சந்திரா மகால்!

ஒருபக்கம் வழக்கு முடிந்து சொத்துக்கள் மீட்கப்பட்ட மகிழ்ச்சியில் கார்த்திக்கும் மயில்வாகனமும் நேராக சாமுண்டீஸ்வரியைச் சந்திக்கிறார்கள். சந்திரகலாவின் பிடியிலிருந்து சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்பட்டுவிட்டதாகவும், அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் சந்தோஷமான செய்தியைச் சொல்கிறார்கள்.

இதற்கிடையில், காவல் நிலைய லாக்-அப்பில் இருக்கும் சிவனாண்டியை சந்திரகலா சந்திக்கிறார். அப்போது கார்த்திக் போட்ட திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு சிவனாண்டியும் அதிர்ச்சியடைகிறார். கார்த்திக்கை எப்படியாவது வீழ்த்த நினைத்தாலும், ஒவ்வொரு முறையும் அவன் நம்மை முந்திக்கொள்கிறானே என்று இருவரும் புலம்புகிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் சேட்டு சந்திரா மகாலுக்குப் பூட்டு போட்டு, பாதுகாப்புக்கு ஆட்களையும் நிறுத்தி சீல் வைத்துவிடுகிறார். இதனால் சந்திரகலாவுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

சொந்த வீட்டுக்குத் திரும்பிய சாமுண்டீஸ்வரி... நெகிழ்ச்சியில் குடும்பம்!

இதற்குப் பிறகு கே.ஆர். இல்லத்தில் இருக்கும் குடும்பத்தினர் அனைவரிடமும் நடந்த விஷயங்களை கார்த்திக் விளக்கிச் சொல்கிறார். பின்னர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சாமுண்டீஸ்வரியின் சொந்த வீட்டுக்குச் செல்கிறார்கள்.

நீண்ட நாட்களாகப் பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்து, சாமுண்டீஸ்வரியை உள்ளே செல்லுமாறு அன்புடன் அழைக்கிறார்கள். ஆனால், வீட்டின் வாசல் வரை வந்த கார்த்திக் மட்டும் உள்ளே செல்லாமல் தயங்கி நிற்கிறார். மாமா ராஜராஜன், ரேவதி என அனைவரும் அழைத்தும் கார்த்திக் உள்ளே வர மறுக்கிறார்.

கடைசியாக சாமுண்டீஸ்வரியே கார்த்திக்கின் அருகில் வந்து, "கார்த்திக், உள்ளே வாங்க" என்று அன்பாக அழைக்கிறார். இதையடுத்து சாமுண்டீஸ்வரியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு கார்த்திக்கும் புன்னகையுடன் வீட்டுக்குள் செல்கிறார்.

இதைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US