கார்த்திகை தீபம் அப்டேட்: ரேவதிக்குத் தெரிந்த அதிர்ச்சி உண்மை! அருணின் இதயமா? அதிர்ச்சியில் உறைந்த ரேவதி!
கார்த்திகை தீபம்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் ‘கார்த்திகை தீபம்’. அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரியின் அதிரடி அறிவிப்பு!
தன் அம்மாவின் மரணத்துக்கு ராஜசேதுபதி காரணம் இல்லை என்பதை கார்த்திக் நிரூபித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, இனிமேல் வீட்டில் நடக்கும் எல்லா விசேஷங்களிலும் ராஜராஜன் கலந்துகொள்ளலாம் என்று சாமுண்டீஸ்வரி அறிவிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், இனி ரேவதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையையும் நிறுத்தப் போவதாகச் சொல்கிறார். இதற்கிடையில், சுவாதி – தினேஷ் ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு செய்வதற்காக வீட்டுக்கு ஜோசியர் வருகிறார்.
அப்போது சதீஷுக்கு அவரது அக்கா போன் செய்து, தனது திருமணம் நின்றுவிட்டதாகவும், நாளை ஊருக்கு வந்து நேரில் பேசுவதாகவும் சொல்கிறார். இந்த விஷயத்தை சதீஷ் சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல, அவரும் அதற்கு ஆறுதல் கூறுகிறார்.
நடுத்தெருவுக்கு வந்த சந்திரகலா குடும்பம்!
மறுபக்கம், இழந்த வீட்டை மீண்டும் வாங்குவதற்காக சந்திரகலாவும் அவரது கணவரும் பழைய சேட்டைச் சந்தித்துப் பேசுகின்றனர். ஆனால், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தால்தான் வீட்டைத் திரும்ப வாங்க முடியும் என்று சேட்டு திட்டவட்டமாகச் சொல்லி விடுகிறார்.
வேறு வழியே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் சந்திரகலா குடும்பம், தற்காலிகமாக ஒரு கோவிலில் தஞ்சம் அடைகிறது. அந்த நேரத்தில் அங்கு வரும் சாமுண்டீஸ்வரி, மூன்று பைகளைத் தூக்கி வீசுகிறார்.
அதிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம் கொட்டுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடையும் அவர்களிடம், "உங்க சொத்தெல்லாம் போயிடுச்சா? இந்தப் பணத்தை எடுத்துக்கிட்டு உங்க வேலையை மட்டும் பாருங்க. இனிமே என் பக்கம் வரக்கூடாது. மீறி வந்தா நான் பேச மாட்டேன், என் துப்பாக்கிதான் பேசும்" என்று கடுமையாக எச்சரிக்கிறார்.
கார்த்திக்கும் தன் பங்குக்கு அவர்களை எச்சரித்துவிட்டு, இனிமேல் தங்கள் வழியில் குறுக்கிடக் கூடாது என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
உண்மையைச் சொல்லி ரேவதியை அதிர்ச்சியில் ஆழ்த்திய கார்த்திக்!
இதற்கிடையில், பரமேஸ்வரி பாட்டி வீட்டில் இருக்கும் ரேவதி, சுவாதி – தினேஷ் ஜோடிக்கு முதலிரவுக்காக ஜோசியர் நாள் குறித்துக் கொடுத்த சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

அப்போது கார்த்திக்கிடம் பேசும் ரேவதி, "எனக்கு இதய தானம் செய்தவங்களோட குடும்பத்தை நேரில் பார்த்து நன்றி சொல்லணும்" என்று தனது ஆசையைச் சொல்கிறார். இதைக் கேட்டதும் கார்த்திக் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். முதலில் அவர்கள் வெளியூருக்குச் சென்றிருப்பதாகச் சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார். ஆனால், ரேவதியோ விடுவதாக இல்லை.
"என் மேல சத்தியமா உண்மையைச் சொல்லுங்க" என்று கார்த்திக்கிடம் கேட்கிறார். ரேவதி மீது கொண்ட அன்பாலும், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தாலும் கார்த்திக் உண்மையைச் சொல்லிவிடுகிறார். "அத்தைக்கு பொருத்தப்பட்டிருக்கிறது அருணோட இதயம்தான்" என்று கார்த்திக் கூறியதும் ரேவதி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
அருணின் இதயம் அம்மாவுக்கு பொருத்தப்பட்டிருக்கும் உண்மை தெரிந்ததால் ரேவதியின் அடுத்தகட்ட முடிவு என்னவாக இருக்கும்? கார்த்திக்கிடம் இதுகுறித்து என்ன கேட்கப் போகிறார்? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ஜென்சன் ஹுவாங் காதல் விவகாரம்... ஏற்றுமதித் தடைகளை மீறி Nvidia சிப்களை வாங்கிக் குவித்த சீனா News Lankasri
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu